கதிரவனுடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்

Powered By Kathiravancom

ஐயப்பன் கோவில் வரலாறு ! (வீடியோ இணைப்பு)

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் திகழ்பவர்  ஸ்ரீ தர்ம சாஸ்தா. இவரை பற்றிய வரலாறுகளை புராணங்களில் சிறப்பாக காணலாம்.

பரமேஸ்வரருக்கும் மோகினி உருவில் வந்த மகாவிஷ்ணுவிற்கும் அவதரித்தவர் ஸ்ரீ தர்மசாஸ்தா(ஐயப்பன்).





கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது ஆன்றோர் வாக்கு.    .தமிழ் நாட்ட்டில் எல்லா ஊர்களிலும் பல கோவில்கள் உண்டு.இருந்தபோதிலும்  ஐயப்பன் கோவில்கள் தமிழ் நாட்டில் அதிகம் இல்லை.சபரிமலைக்கு போகும் பக்தர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.சரியான முறையான ப்ரதிஷ்டை செய்யப்பட்ட ஐயப்பன் ஆலயங்கள் மிகவும் குறைவு என்ற கருத்தில் இருந்த 1965ம் ஆண்டு முதல் சபரிமலைக்கு சென்று வரும்  திரு. கிருஷ்ணன் குருசாமி(மாம்பலம்) என்பவர் கனவில் ஐயப்பன் தோன்றி சென்னையில் மலை அடிவாரத்தில் தனக்கு ஒரு கோவில் கட்ட வேண்டும் என்று  கூறினார்.உடனடியாக குருசாமி அவர்கள் ஐயப்பன் கோவில் கட்ட வேண்டும் என்ற ஒத்த கருத்து கொண்டிருந்த அன்பர்களுடன் ஸ்ரீ தர்ம சாஸ்தா ட்ரஸ்டை 1994ல் துவங்கினார்.

சென்னை நகரில் பல இடங்களை பார்த்து எதுவும் சரியாக அமையாததால் நகருக்கு வெளியே, மாம்பலத்திலிருந்து 30 கி மீ தள்ளியிருந்த பம்மலில் அவர் எண்ணியவர்று தக்க அமைப்புடன் காலி மனை உள்ளதை அறிந்தார். கோவில் கேரள முறைப்படி அமையவேண்டும் என்று கருதியதால்  கேரளாவிலிருந்து பணிக்கர்களை அழைத்து ப்ரச்னம் பார்த்ததில் மலை அடிவாரத்தில்தான் கோவில் அமையும் என்று கணித்தனர். சிவன் மலைக்கும் திரு நீர்மலைக்கும் நடுவில,  இப்போது கோவில அமைந்துள்ள இடம்தான் நிச்சயமாகும் என்று  ப்ரச்னத்தில் கூறினர்.



எல்லோருடைய நல்லெண்ணங்களாலும் எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்ப கடவுள் அனுக்ரஹத்தினாலும் பம்மல் சங்கரா நக்ரில் கோவில் கட்டுவது என்பது 2000 ஆண்டில் நிச்சயமானது.ட்ரஸ்ட் 1994ல் ஆரம்பித்து கோவில் கட்டும் பணி ஆரம்பிக்கும் முன்பே பல நல்ல பணிகளை செய்து வந்தது. குறிப்பிடும்படியாக, அனாதை குழந்தை ஆஸ்ரமங்களுக்கு சென்று ஒவ்வொரு ஆண்டும் அவர்களுக்கு வேண்டிய துணிமணிகள் பாட புத்தகங்கள் ஆகியவற்றை அளித்து வந்தது.தவிரவும், முதியோர் இல்லங்களுக்கும் (old age home) சென்று அவர்களுடைய தேவைகளையும் பூர்த்தி செய்து வந்தது. இதை தனது தலையாய கடமையாய் செய்து வந்ததுடன் வேதம் படிக்கும் சிறார்களுக்கு ஹிந்து தர்மம் தழைக்க ஆண்டுதோரும் வேத வித்துக்களின் தீபாவளி, பொங்கல் விழாக்கால செலவுகளை  ட்ரஸ்ட் ஏற்று நடத்தி வந்தது. திரு கிருஷ்ணன் குருசாமி அவர்களின்  எண்ணங்கள் கோவில் கட்டுவதோடு மாத்திரம் இல்லாமல் சமூக கண்ணோட்டத்திலும் சென்றது.

இன்றும் தொடர்கிறது

மிகுந்த சிரமத்துடன் நிலம்  வாங்கிய இடத்தில் மேற்கொண்டு கோவில் கட்ட முடியாதவாறு பல இடையூறுகள்,சமூக விரோதிகளின்

அச்சுறுத்தல்கள் 2-3 ஆண்டுகள் தொடர்ந்தது.கோவில் கட்டக்கூடாது என்று கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தனர் ,ஐயன் அருளாலும் நீதித்துறையின் தீர்ப்பினாலும் மலை போல் வந்த எல்லா இடையூறுகளும் களையப்பட்டு கோவில் கட்டும் பணிகள் இனிதே துவங்கியது.

சபரிமலையில் உள்ளது போலவே கோவில் அமையவேண்டும் என்று தீர்மானித்த்தால் ஆலய அமைப்பு விக்ரக அமைப்பு எல்லாமே அங்குள்ள் கோவில் கட்டமைப்பு நிபுணர்கள்,ஆசாரிகள்,சிற்பிகள் இவர்களின் ஆலோசனைப்படியே செய்யப்பட்டது.அய்யனின் திரு உருவம் ஐம்பொன்னால் நாகர்கோவிலில் செய்யப்பட்டது.பக்தர்கள் பக்தியுடன் அளித்த தங்கம்,வெள்ளி மற்றும் உலோகங்களும் கலந்து ஒரு நல்ல நாளில் வார்ப்பு செயப்பட்டு ஐயப்பன் விக்ரஹம் முறையாக உருவானது.அந்த விக்ரஹம் பல ஆலயங்களிலும் பக்தர்களின் பார்வைக்கும்,வழிபாட்டுக்கும் வைக்கபடடு,பின் கோவில் வளாகத்திற்கு சகல மரியாதைகளுடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இவ்வாறே மற்ற சிலைகளும் சிற்ப சாலைகளில் செய்யபட்டு கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு முறையே நீரிலும்,நெல்லிலும் வாசம் செய்து

கும்பாபிஷேக நன் நாளை எதிர் நோக்கின.

அன்பர்கள் அளித்த பொருளுதவியாலும், ஆதரவினாலும் ஆலய கும்பாபிஷகம் 12.07.2008  அன்று மலயத்தாட்டு மனா ப்ரம்மஸ்ரீ ஆர்யன் நம்பூத்ரி அவர்களால் ப்ரதிஷ்டை செய்யப்பட்டது.ஹோமங்களும்,பூஜைகளும்  கேரளாவிலிருந்து வந்த வேத விற்பனனர்களால் கிரமமாக செய்யப்பட்டது.மற்றும் சபரிமலையைன் முன்னள்  மேல் சாந்தியும் ப்ரம்மஸ்ரீ ராமன் நம்பூத்ரி அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தது

பக்த கோடிகளின் பாக்கியம். குறிப்பிட்ட நல்ல நேரத்தில் வேத கோஷத்துடனும்  பக்தர்களின் பக்தி கோஷத்துடனும் இனிதே நிறைவேறியது.சபரி மலை போன்றே இங்கும் சாஸ்தா மூலவர். சபரி மலையில் இருப்பது போன்றே வினாயகர் சன்னதி, மாளிகைபுரத்து அம்மா சன்னதி,நாகராஜாக்களுக்கு சன்னதி தவிர சிவனுக்கும் சனனதி உண்டு சன்னதி விவரங்கள் பின் வருமாறு

வினாயகர் சன்னதி:

இடம்புரி வினாயகர்.பெரிய உருவம். சிற்பம்  அவினாசியில் செய்யப்பட்டு ஸ்தாபிக்கப்பட்டது. வரப்பிரசாதி. வேண்டிய காரியங்கள் கைகூட அருள் பாலிக்கிறார். ப்ரதி மாதம் சங்கட ஹர சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. எல்லா தமிழ் மாத பிறப்பு நாட்களில் ம்கா கணபதி

ஹோமம் நடை பெறுகிறது.மண்டல கால் பூஜையை முன்னிட்டு 48 நாட்களும் மஹா கணபதி ஹோமம் நடைபெறுகிறது.

மாளிகைபுரத்து அம்மன் சன்னதி:

இந்த கோவிலில் அஷ்டபுஜ துர்க்கையாக காட்ஷி கொடுக்கிறாள். எல்லா கோவிலிலும் துர்க்கை சன்னதி வடக்கு பார்த்து அமையும். இந்த கோவில் விசேஷம் என்னவென்றால் அம்மன் கிழக்குபுரம் பார்த்து அருள்பாலிக்கிறாள். எப்படி காசியில் விசாலாடஷி விஸ்வனாதரை பார்த்து கொண்டு இருக்கிறாளோ அதே மாதிரி இங்கே அம்மன் சிவன் சன்னதியை பார்த்து காட்ஷி தருகிறாள். இது எந்த கோவிலிலும் இல்லாத அற்புதம் . அம்மன் சன்னதியில் பிரதி வெள்ளிக்கிழமைதோறும் பகவதி சேவை விமரிசையாக் நடக்கிறது.

பெண்கள் எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் லலிதா சகஸ்ர நாமம் சொல்கிறார்கள்.திருமாங்கல்யம்,தங்க ஆபரணங்கள். வெள்ளி கவசம், புடவைகள்  ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கை அளிப்பதாக வேண்டிக்கொண்டு நல்லவிதமாக தங்கள் எண்ணம் நிறைவேறியபின் அம்பாளுக்கு சாத்தி மகிழ்கிறார்கள்.பவுர்ணமி தினம் அம்மனைப் பார்ப்பது மிக விசேஷம்.

சிவன் சன்னதி:

 இந்த சன்னதியில் மூன்று லிங்கங்கள் உள்ளன. அவை மரகத லிங்கம் ,பாண லிங்கம்,பாதரச லிங்கம்.

மரகத லிங்கம்:  விலை மதிப்பற்றது. இது ஒரு அன்பரால் கும்பாபிஷேக சமயத்தில்  கோவிலுக்கு அன்பளிக்கப்பட்டது இது ஒரு இனிமையான, எதிபாராமல், பக்தர்களுக்கு  கிடைத்த பொக்கிஷம்.

பாண லிங்கம்: கண்டிகை நதியில்  ஓர் அன்பருக்கு இந்த பாண லிங்கம் கிடைத்தது.அவர் அதை சிலாஸ்தபன சமயத்தில் கோவிலுக்கு கொண்டு வந்து கொடுத்தார்.இதில் சுயம்புவாக நெற்றிக்கண் அமைந்து இருப்பது ஓர் அதிசயம் !

பாதரச லிங்கம்: முழுக்க முழுக்க பாதரசம்,மற்றும் வில்வ இலை சாறின் கலவையால் ஆனது. அபூர்வமான வகையாகும், நாங்கள் அறிந்தவரை தென் தமிழகத்தில் மூன்று லிங்கங்கள் ஒருசேர பூஜிக்கப்படுவது இந்த சன்னதியில் மட்டும்தான் இந்த சன்னதியில் பிராதோஷ பூஜை மிக சிறப்பாக நடக்ககிறது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தென்னாடுடைய சிவனின் அருளை பெறுகிறார்கள்.

நாகராஜா சன்னதி:

சாதாரணமாக எல்லா ஆலயங்களிலும் அந்த கோவில் முறைப்படி நாகராஜாவை ப்ரதிஷ்டை செய்வார்கள்.ஆலப்புழை மன்னர் சாலையில் உள்ள் ப்ரசித்தி பெற்ற நாகப்ரதிஷடை ,ஆதிசேஷனுடைய அவதார ஷேத்திரமாகும்.இது  கேரளத்தில் சர்ப்ப காவு என்று சொல்லப்படுகிறது.இதே முறையில் நமது ஆலயத்தில் தந்த்ரி,நாகராஜாவை நேராக ஆவாஹனம் செய்து ப்ரதிஷ்டை செய்துள்ளார்கள். சென்னை மா நகரத்தில் வேறு எங்கும் இது மாதிரியான ப்ரதிஷ்டை கிடையாது. ஆயில்ய நஷத்டிரத்தின் அதிபதியான ஸ்ரீ நாகராஜாவை ப்ரதி மாதம்

மேற்படி ஆயில்ய நட்ஷத்திரத்தன்று தாந்த்ரீக்முறையில் பூஜை செய்யப்படுகிறது.இந்த பூஜையில் கலந்து கொண்டு பாலபிஷேகம் செய்தால் நினைத்த காரியம் கைகூடும்.ராகு கேது தோஷம் நிவர்த்தியாகும்.தடை பெற்ற திருமணங்கள் விரைவில் நிறைவே,சரும வியாதிகள் குறையுமெனபதால் பக்த கோடிகள ஆயில்ய நட்ச்த்திர பூஜையில் கலந்து கொண்டு பலனடைந்து வருகிறார்கள். இதன் பலனை எல்லா பக்த்ர்களூம் பெற வேண்டும் என்பது ட்ரஸ்டின் விருப்பம். இந்த சன்னதியில் ஸ்ரீ.நாகராஜா ,நாகராணி சமேதராக காட்சி அளிக்கிறார். வேம்பு, வில்வ, அரச மரங்களின் அடியில் அமர்ந்து அருள் பாலித்து வருகின்றார்.

தர்ம சாஸ்தா சன்னதி:

கோவிலிற்கு தேர்ந்து எடுத்த இடம் வில்வ மரங்களும்,கிருஷ்ண துளசியும் நிறைந்திருந்தது.அதுவே  ஒரு நல்ல

அறிகுறியாகப்பட்டது.தற்போது ஸ்ரீகோவிலில் ஐந்து மற்றும் ஏழு தள வில்வம் ஸ்தல் விருட்ஷமாக உள்ளது.

இந்த கோவிலின் ப்ரதிஷ்டா தெய்வம் ஸ்ரீ. தர்ம சாஸ்தா. சபரிமலையிலிருந்து ஸ்ரீ ஐயப்பன் பக்த கோடிகளை அனுக்ரஹிப்பது போல்

இவ்ர் இங்கிருந்து அனுக்ரஹிக்கிறார். இந்த  கர்ப்ப க்ரஹ அமைப்பு சபரிமலை கர்ப்ப க்ரஹத்தை விட சற்று

சிறியது. கர்ப்பக்ரஹத்தின் உள்புறம் 82  கிலோ பல நிறமுடைய ஸ்படிக கற்களால் நிறப்பபட்டது.இதனால் கர்ப்ப க்ரஹத்திலிருந்து நல்ல வித

மான ஆகர்ஷண சக்தி (COSMIC ENERGY)  வெளிப்பட்டு  பக்தர்கள் பலனடைய வேண்டுமென்பது ட்ரஸ்டின் எண்ணம்.

இந்த கோவிலின் வரைபடம் காணிப்பய்யூர்  கிருஷ்ணன் நம்பூத்ரியால் தயாரிக்கப்பட்டு பிற்பாடு சபரிமலை கர்ப்பக்ரஹத்திற்கு ஏற்றப்படி மாற்ற்ப்பட்டது. ஐயப்பன் சிலை சபரிமலை தந்த்ரியின் ஆலோசனைப்படி செய்யப்பட்டது. இது ஒரு பஞ்ச லோக விக்ரஹம். சபரி மலை போன்று இங்கேயும் தர்ம சாஸ்தாவாக ஆவாஹனம் செய்யப்பட்டது.தர்மசாஸ்தாவாக ஆவாஹனம்  செய்யப்பட்டுள்ளதால் இந்த கோவிலில்  கருப்பு சாமி, கருப்பாயி அம்மா,பெரிய  கடுத்த சாமி  ஆகிய காவல் தெய்வங்கள் கோவில் நுழை வாயில் முன்பு வலது இடது புறமாக்  ப்ரதிஷ்டை செய்யப்பட்டுளது.. திருப்பணித்துரா. மலையத்தாட்டு மனா  ப்ரம்மஸ்ரீ ஆர்யன்  நம்பூத்ரியால்  12.07.2008 அன்று கும்பாபிஷேகம், மிக சிறப்பாக் நடை பெற்றது. ப்ரதிஷ்டா தினமும் கிரமப்படி,நம்பூதிரி சொல்படி 02.07.2009 அன்று வெகு சிறப்பான முறையில் கொண்டாட பெற்றது.

சாஸ்தாவின் பெருமைகள்:

இந்த கோவிலில் தர்ம சாஸ்தா அவர்கள் சகல சௌபாக்கியங்களும் தரும் கல்யாண சுந்தர சாஸ்தாவாக இருந்து வருகிறார். இவரது ப்ரபாவங்கள் சொல்லில் அடங்கா. பல பக்தர்கள் தாங்கள் வேண்டிக்கொண்ட விஷயங்களை ஐயப்பன் எவ்வளவு விரைவாக விமரிசையாக நிகழ்தியுள்ளார் என பரவசத்துடன் சொல்லியுள்ளார்கள். குறிப்பாக நீண்ட காலமாக தடைப்பட்ட தங்கள் மக்கள் திருமணங்கள் இந்த  சனனதியில் முறையிட்ட பின்  சில காலத்திலேயே  நடந்தேறியுள்ளதாக கூறியுள்ளார்கள்.பக்த கோடிகளின் மனோபீஷ்டங்களை  உடனடியாக் நிறைவேற்றி  எல்லா குறைகளையும் தீர்க்கும் பக்த அனுகூல தர்ம சாஸ்தாவாக நின்று ஆட்சி புரிகிறார். எல்லா மக்களும் இந்த ஆலயத்திற்கு வந்து எல்லா நலமும் பெற்று இன்புற வாழ வேண்டும் என்று ஸ்ரீ தர்ம  சாஸ்தாவின் சன்னதியில் ட்ரஸ்ட்    ப்ரார்த்தனை செய்கிறது.

"ஸாஸ்தா குடும்பஸ்த்ரியம்" என்பது சான்றோர் வாக்கு.தன்னை வணங்கும் பக்தர்களின் குடும்பங்களை காப்பதில் பிரியமுள்ளவர் ஸ்ரீ தர்ம சாஸ்தா. ஆதலால் சாஸ்தாவை பக்தி ஸ்ரத்தையுடன் ஆராதித்தால் அவர் வெகு ஸ்ரத்தையுடன் நம்மையும் நமது குடும்பத்தினரையும் பாதுகாத்து அருள்வார்.

நமது திருக்கோவிலில் எல்லா சன்னதிகளிலும் தினமும் தாந்த்ரீக முறைப்படி மேல் சாந்தி திரு விக்ரமன் நம்பூத்ரி அவர்களால் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இக்கோவிலில் சிறப்பு பூஜைகளாக கணாபதி ஹோமம், அஷ்டாபிஷேகம்,பின் விளக்கு.நெய் விளக்கு,ஜல தாரை பூஜை,புஷ்பாஞ்சலி.புஷ்பாபிஷேகம்,இரு முடி கட்டு நிரை,திருவாதிரை தினம்,சிவனுக்கு பூஜை ஆகியவை நடை பெற்று வருகிறது.

மேற்கொண்டு நமது கோவிலில் கொடி மர ப்ரதிஷ்ஸ்டை செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 கோவிலின் சிறப்பம்சங்கள்:

ஸ்பரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் வசதிக்காக மாலைகள் ,வேஷ்டி துண்டுகள் , சைடு பைகள் விற்கப்படுகின்றன. மாலை 08.30க்கு சபரி மலையில் உள்ளதுபோல் ஹரிவராசனம் பாடி நடை அடைப்பது சிறபபம்சம். இதைக்காண வேண்டி பக்தர்கள் திரளாக் வருகின்றனர்.சபரிமலை செல்லும் பக்தர்கள் கோவிலில் இரு முடி கட்டிக்கொண்டு தங்கள்  யாத்திரை இனிதாக நடைபெற வேண்டிக்கொண்டு  செலகிறார்கள்.

குருவாயுரப்பன் திருக்கோவில்:

 நமது கோவிலின் வலது பகுதியில்  ஸ்ரீ குருவாயூரப்பனின் சன்னிதானம் வர இருக்கிறது.சிலா ஸ்தாபனம் 12.072009 அன்று திருப்பணித்துரா   மலயத்தாட்டு மனா ப்ரம்ம  ஸ்ரீ ஆர்யன் நம்பூத்ரி தலைமையில்  ஏராளமான பக்தரகள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடந்தேறியது. விரைவில் விக்ரஹ ப்ரதிஷ்டை செய்ய  ஏற்பாடுகள் நடந்து வருகிறது.  குருவாயுரப்பன் ஆலயம் அமையவுள்ள மனை திரு .அப்பாஸ்வாமி அவர்களால் இலவசமாக நமது ட்ரஸ்டிற்கு அளிக்கப்பட்டது.

கேரளத்தில் உள்ள குருவாயுரப்பன் ஆலயத்தில் உள்ளதுபோல் இங்கும் துலாபாரம்,அன்ன ப்ராசனம் எல்லாம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.அதே போல், வர உள்ள குருவாயுரப்பன் சன்னதி மற்ற சன்னதிகளாய்ப்போல் அல்லாமல் வட்ட வடிவமாக் கட்ட தீர்மானித்துள்ளது. இதனுடைய கும்பாபிஷேகம் ஜூலை  2010ல் நடத்த குருவாயுரப்பன் அருளால்   தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் திரளாக வந்து ஐயப்ப்ன் அருளை பெறவேண்டுமென்பது எங்கள் ட்ரஸ்டின் அவா.

நமது ஐயப்பன் கோவில் கட்ட காரணமாக் இருந்த ட்ரஸ்டீக்கள்,ஆலய கமிட்டீ உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.. அவர்களும் அவர் குடும்பத்தினரும் எல்லா நலங்களும் பெற தர்ம சாஸ்தாவை ட்ரஸ்ட் வேண்டிக்கொள்கிறது.


Get this gadget at facebook popup like box
09