* சித்ரா பவுர்ணமி அன்று விரதமிருந்து விளக்கேற்றி வழிபட்டால் தானியம் பெருமளவில் கிடைக்கும்.
* வைகாசி மாத பவுர்ணமி அன்று விரதமிருந்து விளக்கேற்றினால் மணமாகாத பெண்களுக்கு விரைவில் நல்ல இடத்தில் வரன் கிடைத்து திருமணம் நடைபெறும்.
* ஆனி மாத பவுர்ணமி தினத்தில் விளக்கேற்றினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
* புரட்டாசி மாதம் வரும் பவுர்ணமி அன்று விரதமிருந்து வணங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகும். பசுக்கள் விருத்தியாகி பால் வியாபாரம் பெருகும்.
* ஐப்பசி மாதப் பவுர்ணமி அன்று விரதமிருந்து விளக்கேற்றினால் உணவு தானியம் பெருகி, பசிப் பிணிகள் முற்றிலும் நீங்கும்.
* கார்த்திகை மாதம் பவுர்ணமி தினத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்தால், பேரும், புகழும் வளர்ந்து நிலைத்து நிற்கும்.
* மார்கழி மாதப் பவுர்ணமியில் விளக்கேற்றி வழிபட்டால் ஆரோக்கியம் கிடைக்கும். உடல் பலம் கிடைக்கும்.
* மாசி பவுர்ணமி அன்று விளக்கேற்றினால் துன்பம் விலகி இன்பம் கிடைக்கும்.
* பங்குனி மாதப் பவுர்ணமி நாளன்று விளக்கேற்றினால், தர்மமும், புண்ணியமும் செய்த பலன் கிட்டும்.
இவ்வாறு தமிழ் மாதங்களில் வரும் பவுர்ணமி நாளில் விளக்கேற்றி விரதமிருந்து வழிபாடு செய்வது நற்பலன்களைத் தந்திடும் என்பது நம்பிக்கை.
0 Kommentare:
Kommentar veröffentlichen