கதிரவனுடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்

Powered By Kathiravancom

இஸ்லாத்தில் இந்து மத சடங்கு !

இஸ்லாம் மதம் என்பது முகமது நபி அவர்களுக்கு இறைவன் தனியாக அறிவித்தது அதில் இறைவனின் சொந்தக் கருத்துக்கள் கொள்கைகள் மட்டுமே இருக்கிறது என்று பல இஸ்லாமிய பெருமக்கள் நம்புகிறார்கள் மற்ற மதத்தாரிடம் பிரச்சாரமும் செய்கிறார்கள்




நிஜமாகவே இஸ்லாம் என்பது இறைவனால் வகுத்து சொல்லப்பட்ட மார்க்கம் தானா? அல்லது நபி அவர்களின் காலத்திற்கு முன்பு உள்ள கருத்துக்களை அவர் தொகுத்து வெளியிட்டரா? என்று சிந்தித்தால் பல உண்மைகள் மேலோட்டமாகவே தெரிகிறது

அரபு நாட்டில் முகமது நபி அவர்கள் பிறப்பதற்கு முன்பு விக்கிரக வணக்க மதமும், யூத மதமும், கிறிஸ்த்துவ மதமும் இருந்ததாக இஸ்லாம் நூல்கள் கூறுகின்றன.

யூத கிறிஸ்த்துவ மதங்கள் தோன்றுவதற்கு முன்பு அந்த பகுதிகளில் சூரிய வழிபாடும், லிங்க வழிபாடும் மற்றும் சில குட்டி தேவதைகளின் வழிபாடும் இருந்தது

புதிதாக தோன்றிய ஹீபுரு கிறிஸ்த்துவ மதங்களில் சிலர் இணைந்தாலும் கூட ஆதி மதத்திலேயே பெருவாரியான மக்கள் இருந்து இருக்கிறார்கள்.

மெக்காவிலுள்ள புனித காபாவில் முன்னூற்றி அறுபது சிலைகள் இருந்திருக்கின்றன . தினமும் ஒவ்வொரு சிலையாக வணங்கி வந்து ஆண்டின் இறுதியில் ஐந்து நாட்கள் விரதம் இருந்து காபாவிற்குள் உள்ள மூல லிங்கத்தை மக்கள் வழிபடுவார்களாம்.

இயேசு பிறப்பதற்கு முன்னூற்றி அறுபது வருஷத்திற்கு முன்பே அரேபியாவில் யூத மதம் காலூன்றி விட்டது. அப்போதைய ஏமன் மன்னன் தனது ஆதி மதத்தை கைவிட்டு யூத மதத்தை தழுவினாராம்.

மேலும் அரேபியாவிலுள்ள குரேஷியர்கள் காலங்காலமாக சிலை வணக்கத்தையே மேற்கொண்டிருந்தனர்.

இப்படி ஆதி மதம், சிலை வணக்க மதம் என்று சொல்லப்படுவது எந்த மதத்தை என்று மேலோட்டமாக ஆராய்ந்தாலே மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் மண்ணுக்கடியில் கிடக்கும் சிவலிங்கங்கள் அது இந்து மதம் தான் என நமக்கு சொல்லாமல் சொல்லி விடும்.

ரமலான் மாதம் பத்தாம் பிறை என்று பதினாராயிரம் குதிரை படையுடன் போர் ஆயுதங்களுடன் வந்த முகமது நபி அவர்கள் காபிர்கள் என்ற சிலை வழிபாட்டினை வென்று மெக்காவை ஆக்கிரமித்து காபாவிற்குள்ள 360 சிலைகளையும் குபல் என்று அழைக்கப்பட்ட மூல விக்கிரகத்தையும் உடைத்து சின்னா பின்னா படுத்தினார்.

அது முதலே அரபு நாடுகளில் இந்து மதம் அழிய தொடங்கி விட்டது எனலாம்.
குரானில் ஒவ்வொரு இஸ்லாமியனும் தனது வாழ்நாளில் ஐந்தாவது கடமையாகிய ஹஜ் பயணத்தை மேற்கொள்ள வேண்டுமென்று சொல்கிறது.

இந்த பயணத்தின் போது இஸ்லாமியர்கள் நடந்து கொள்ளும் விதத்தை உற்று நோக்கினால் இந்து மத சாயல் இருப்பதை பார்க்கலாம்.

இஸ்லாமிய சின்னமான தொப்பி அணிய கூடாது.

தையலும் கரையும் இல்லாத ஒரு வெள்ளைத் துண்டை அங்கவஸ்திரம் போல் உடலின் மேற்பகுதியில் போட்டு கொள்ள வேண்டும்

இடுப்பிலும் அதே போல் ஒரு துணித்தான் கட்ட வேண்டும்.

வாசனை திரவியங்களை உடலில் பூசிக் கொள்ள கூடாது.

மிக கண்டிப்பாக பிரம்மசரியத்தை கடைபிடிக்க வேண்டும்.

உயிர் கொலை செய்யக் கூடாது.

இவைகள் எல்லாம் ஏறக்குறைய இந்து மத விரத முறைகளே ஆகும்.
இதை விட முக்கியமானது ஹஜ் புனித பயணம் காபாவில் உள்ள புனித கல்லை தொட்டு முத்தமிடுவதோடு நிறைவடைகிறது
இந்த கல் ஏறக் குறைய சிவலிங்க வடிவமாக இருப்பதாக சொல்கிறார்கள்.

குரனுக்குள் ஆழமாக நுழைந்து சென்றால் அர்த்த சாஸ்திரத்தின் சில கருத்துக்கள் பரவி கிடப்பதை காணலாம்.

இந்து மத கருத்துக்கள் வாழ்வியல் நடை முறைகள் இந்த அளவு இஸ்லாத்தில் வெளிப்படையாக தெரிகிறது என்றால் குரான் முழுவதும் பல இடங்களில் பைபிளின் அரபு மொழி பெயர்ப்பு போலவே தான் உள்ளது

இஸ்லாமிய சட்டமான ஷரியத் ஒன்றை தவிர மீதம் எல்லாமே மற்றும் சில மதங்களில் இருந்து கடனாக பெற்றது போல் தான் தோன்றுகிறது

இஸ்லாமியர்களின் தனித்துவமான பழக்கம் என்று சொல்லப்படும் சுன்னத் கூட யூதர்களிடம் இருந்து வந்ததே ஆகும்

இஸ்லாம் என்ற சொல்லுக்கு கடவுளுக்கு முற்றிலுமாக அடி பணிதல் அவனை மட்டுமே வழி படுதல் என்ற பொருள் சொல்லப்படுகிறது

மேலும் இறைவனுடைய விருப்பத்தையே தனது விருப்பமாகவும் அவனது வெறுப்பை தனது வெறுப்பாகவும் ஆக்கி கொள்ளுதல் இஸ்லாத்தின் உயிர் சட்டமாக கருதப்படுகிறது

இந்த எண்ணம் நம்பிக்கை மனிதனிடம் வளர்ந்தால் மனங்களின் ஊசலாட்டம் ஆசாபாசங்கள் மற்றும் இச்சைகள் எல்லாம் மறைந்து இறை சிந்தனையில் உள்ளம் நிரம்பி வழியும் என்றும் சொல்லப்படுகிறது

உண்மையில் இந்த கருத்துக்கள் கூட ஆதி கால யூத மதத்திற்கு தோற்றுவாயாக இருந்த சொராஷ்திரிய மதத்தின் மைய கருத்தே ஆகும்
இன்னும் ஆழமாக பல விஷயங்களை எடுத்து அலசினால் இஸ்லாம் என்ற கட்டிடம் முகமது நபியின் தனி சிந்தனையில் உருவானது அல்ல

இதற்கு முன்பு இல்லாது இருந்த ஒரு புதிய விஷயத்தை அல்லா நபிக்கு மட்டும் பிரத்தியேகமாக தரவில்லை என்பது தெரியும்

இதை முஸ்லிம் மக்கள் ஒத்துக் கொள்வது மிகவும் கடினம்

காரணம் இத்தகைய நிஜங்கள் அவர்கள் நம்பிக்கையே குறைப்பதாகவே எடுத்துக் கொள்வார்களே தவிர ஒத்து கொள்ள மாட்டார்கள்

இஸ்லாத்தின் அடி நாதமான மத விஷயங்கள் பல்வேறு இடங்களிலிருந்து தொகுக்கப்பட்ட தொகுப்பே ஆகும்

மற்ற படி உள்ள ஜிகாத்,ஷரியத் என்பவைகள் தான் நபியின் தனி கண்டுப்பிடிப்பு அதுவும் வாழ்வியலுக்கானது அல்ல அக்கால அரசியல் காரணங்களுக்கானதே ஆகும்.

உஜிலாதேவி இணையம்

Get this gadget at facebook popup like box
09