இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை ஆடி அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது. வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே இராசியிற் கூடுகின்ற போதுள்ள காலம் அமாவாசை ஆகும்.
சூரியனைப் “பிதிர் காரகன்” என்கி றோம். சந்திரனை “மாதுர் காரகன்” என்கி றோம். எனவே, சூரியனும் சந்திரனும் எமது பிதா மாதாக்களாகிய வழிபடும் தெய்வங்களாகும்.
சூரிய பகவான் ஆண்மை,ஆற்றல்,வீரம் என்பவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர். சந்திரன் எமது மனதுக்கு அதிபதியானவர். இதனால் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர். இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பூரணை தினங்களில் வழிபாடு செய்வர்.
தை அமாவாசை, ஆடி அமாவாசை இரண்டுமே பித்ருக்களைப் பூஜிக்கும் முக்கிய நாட்களாகக் கருதப்படுகின்றன. என்ன காரணம்? சூரியனின் வட திசைப் பயணமான உத்தராயணம் தை மாதம் ஆரம்பமாகிறது. தென்திசைப் பயணமான தட்சிணாயனம் ஆடி மாதம் தொடங்குகிறது. அதனால்தான், ஆடி மற்றும் தை மாத அமாவாசைகள் விசேஷமானதாக விளங்குகின்றன. இந்த இரண்டு தினங்களும் பித்ருக்களின் ஆசியை நமக்குப் பெற்றுத்தரும் அருமையான தினங்கள். ஏன்? தெரிந்தோ தெரியாமலோ, வாழ்வில் நம்மை அறியாது பல பாவங்களுக்கு நாம் உட்படுகிறோம். பல பிறவிகளில் செய்த பாவங்களும் இப்பிறவியில் நம்மை நிம்மதியின்றி தவிக்க விடுகின்றன. ஆழமாகச் சிந்தித்தால், நமது தவறுகள் நமக்குப் புரியும்.
வயதான பெற்றோர்களை சரிவர பராமரிக்காமல் அவர்களை முதியோர் இல்லம் அனுப்புவது... நகரத்தின் பழக்கங்கள் அவர்களுக்குப் பிடிக்காது என்று கூறி, கிராமத்தில் பெற்றோரை தனியே வைக்கிறார்கள்... பெற்றவர்களை ஷிப்ட் முறை போல அடுத்த மகளிடம் அல்லது மகனிடம் அனுப்புவது... என்ன வேதனை அந்தப் பெற்றோர்களுக்கு! பெற்றோரை உதாசீனப்படுத்திவிட்டு பிறருக்கு கல்விச் செலவுக்கு உதவுகிறேன்... கோயிலில் அன்னதானம் செய்கிறேன் என்பதால், நம் பாவம் நீங்கி புண்ணியம் பெருகிவிடாது. இவை அனைத்தும், இப்பிறவியில் நடைமுறை வாழ்வில் தினமும் நடப்பதை நாமே பார்க்கிறோம். இவற்றின் விளைவுதான்,நமக்கு ஏற்படுகின்ற காரணமில்லாத பிரச்னைகள்.மனக்கஷ்டங்கள்
இவற்றுக்குப் பரிகாரமே பித்ருக்களை பூஜிப்பதும், குலதெய்வத்தை ஆராதனை செய்வதும்தான் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
குடும்பத்தில் ஓர் ஆண் வாரிசு தோன்றியதும், ஆனந்தப்பட்டு தன்னுடைய பித்ரு கடமைகளைச் செய்து தங்களைக் கரையேற்றுவான் என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அதற்காகவே ஏற்பட்டது பித்ரு தர்ப்பண பூஜை. தேவலோக மூலிகையான தர்ப்பையைக் கொண்டு, எள் வைத்து ஜாதி, மத, பேதமின்றி தர்ப்பணம் செய்து மூதாதையரை மகிழ்விக்க வேண்டியது ஒவ்வொருவரின் முக்கியக் கடமையாகும்.
திருவண்ணாமலையில் சிவபெருமான் வல்லாள மகாராஜாவுக்குத் தர்ப்பணம் கொடுப்பது வருடந்தோறும் விழாவாகவே நடைபெற்று வருகிறது. குடந்தையில் சார ங்க பாணிப் பெருமாள் தன் பக்தனுக்கு திதி கொடுக்கிறார். திலதர்ப்பணபுரியில் ஜடாயுவுக்கு ஸ்ரீராமன் தர்ப்பணமளிக்கிறார்.
செங்கல்பட்டுக்கு அருகில் நென்மேலி என்ற இடத்தில் உள்ள பெருமாளுக்கு ‘சிராத்த சம்ரட்சணப் பெருமாள்’ என்ற திருநாமம். தினமும் கோயில் குளக்கரை யில் பெருமாள் எழுந்தருளி மூதாதையருக்கு சிராத்தம் கொடுக்கிறார்.
கொடுமுடி, பவானி,திருப்புட்குழி, ராமேஸ்வரம், வேதாரண்யம், கன்னியாகுமரி போன்ற இடங்களில் ஆடி அமாவாசை, தை அமாவாசை தினங்களில் விசேஷ பூஜைகள் நடைபெறும். ‘கூடுதுறை’ எனப்படும் ஆறுகள், கடல்கள் சங்கமமாகும் கரையோரங்களில் திரளாக மக்கள் கூடி அன்று பூஜை செய்வது வழக்கம்.
முண்டம், தண்டம், பிண்டம் என்றே முறையாக பித்ருபூஜை செய்யும் வழக்கமும் உண்டு. முண்டம் என்பது, அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் பித்ருக்க ளைப் பூஜித்து, முடி களைந்து நீராடி அட்சய வடத்தின் வேர்ப்பாகத்தைத் தரிசிப்பது. ‘தண்டம்’ என்பது, காசி சென்று ‘பஞ்சநதி சிராத்தம்’ செய்து, இறந்த முன்னோர்களைப் பூஜித்து கங்கையில் நீராடி ஸ்ரீவிசுவநாதர், அன்னபூரணி, கால பைரவர் ஆகி யோரை தரிசித்து தண்டம் சமர்ப்பிப்பதா கும். இங்கு அட்சய வடத்தின் மத்திம பாகத்தைத் தரிசிக்க வேண்டும். அடுத்து ‘பிண்டம்’ கொடுப்பது! கயையில் அட்சய வடத்தின் நுனி பாகத்தைத் தரிசித்து, பித்ருக்களிடம் பூஜை செய்தது திருப்தி தானா? குறைகளை மன்னிக்கவும் என வேண்டி, ஆல மரத்தடியில் நின்று வழிபட்டு வர வேண்டும்.
இவ்வாறு முறைப்படி பூஜை செய்து பித்ருக்களைத் திருப்திபடுத்துவதால் அவர்கள் நம்மை மனம் குளிர ஆசிர்வதிக்கின்றனர். அவர்கள் மனம் மகிழ்ந்து அளித்த நற் பலன்கள் அனைத்தும் சுவரில் எறிந்த பந்து போன்று நம்மிடம் திரும்பி வந்து சேரும். தெய்வத்தன்மை பொருந்திய பித்ருக்கள் கங்கை, அருகில் ஆடி அமாவாசை தினத் தன்று காத்து இருப்பது நம் ஐதீகம். சிரமம் பார்க்காமல் ஆடி அமாவாசை சென்று பித்ருக்களைக் கரைசேர்க்கும் பூஜையைச் செய்வது குடும்பத்துக்கு மிகவும் புண்ணி யம் சேர்க்கும்.
அருணா
பக்தி கானங்கள்
பிரபலமானவை
ஆன்மீகம்
Banner 180x90
Kathiravan.com » தொழிநுட்பச் செய்திகள்
வகைகள்
ஆலயங்கள்
ஆன்மீகக் கதிர்
சுவிஸ் பேர்ண் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தின் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜை! 2015
சுவிற்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் தேர்த்திருவிழா 2014
Kathiravan.com
கைகொடுப்போம்
கதிரவனின் வளர்ச்சியில் பற்றுள்ள உள்ளங்கள் தங்களின் பங்களிப்பை இங்கே செய்யலாம். நன்றி
0 Kommentare:
Kommentar veröffentlichen