கதிரவனுடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்

Powered By Kathiravancom

நவகிரகங்கங்களைப் பற்றிச் சில ...

"சொல்லிய அருந்தமிழ் பத்தும் வல்லவர்
அல்லலோடு அருவினை அறுதல் ஆணையே" - திருஞானசம்பந்தர்
 
தோற்றுவாய்
உலகில் உள்ள ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் துன்பத்தை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். துன்பமோ, துயரமோ, தொல்லையோ சிறிதும் இல்லாதவர் எவரும் இல்லை. துன்பங்கள் நம்மை ஏன் தொடர்கின்றன?
துன்பங்கள் நமக்கு எப்படி ஏற்படுகின்றன? என்பனவற்றைத் துன்புறுபவர்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை. ஆனால் துன்பத்தை தாங்க இயலாமல், அதனை போக்குவதற்கான வழி முறைகளைத் தேடி அலைகிறார்கள்.
சோதிட நம்பிக்கை
அவ்வாறு தேடி அலைபவர்களில் பெரும்பாலோர் சோதிட நிபுணர்களைக் கண்டு, தமக்கு எப்போது இந்தத் துயர் நீங்கும் என்னும் கேள்வியை எழுப்பிப் பெரும் பொருள் கொடுத்துச் சோதிடரின் விடைக்காக காத்திருக்கிறார்கள். பரிகாரம் என்னும் பெயரால் பகுத்தறிவிற்கு ஒவ்வாதன பலவற்றைச் செய்து, பொருளையும், காலத்தையும் வீண் விரயம் செய்கிறார்கள். ச்ப்திடர் கூறும் பரிகாரம் நமது துயரை நீக்குமா என்பதைக் குறித்துச் சிறிதேனும் சிந்திப்பதில்லை. சோதிடர்கள் எப்படி பலன் கூறுகிறார்கள்? நான் பிறந்தபோது நவகிரகங்கள் நிற்கும் இடத்தைப் பார்த்து சோதிட நூல்களில் கூறப்பட்டுள்ள விதிகளை அனுசரித்து சோதிடர்கள் பலன் சொல்கிறார்கள். அவற்றுள் சில பலிதம் ஆகும், பல பலிதம் ஆகாமல் போகும். சோதிடர்களின் வாக்குகளில் இருக்கும் நம்பிக்கை, இறைவனிடத்திலும், இறையடியார்களின் அருள்வாக்குகளிலும் நம்மில் பலருக்கு இல்லை என்பது சில சமயம் உண்மை. எனவே தான், நம்மில் பெரும்பாலோர்க்குச் சோதிடர்கள் கூறும் பரிகாரங்களை செய்து முடித்த பின்னும் துயர்கள் நீங்க பெறாமல் தொடர்ந்த வண்ணம் உள்ளன. பலன் சொல்லும் சொதிடர்களில், இறைப்பட்ட்று உடையவர்கள் கூறும் பலன்களே பலிதமாகின்றன என்பது தான் உண்மை.

நவகிரகங்கங்களைப் பற்றிச் சில
நவகிரகங்கள் நமது வாழ்வை எந்த அளவு பாதிக்கின்றன என்பதை, நாம் ஓரளவு புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான், நமது துயரைத் துடைப்பதற்கு எந்த வழியை பின்பற்றினால், அது பயனுள்ளதாக இருக்கும் என்பதில் நமக்கத் தெளிவு ஏற்படும்.
நவகிரகங்கள் இறைவனின் ஏவலர்கள், இறைவன் வகுத்துள்ள சட்டப்படி பிராரத்துவம் எனப்படும் வினை பயன் ஆகிய விதியை, நாம் அனுபவிக்கும்படி செய்வார்கள். இறைவனால் வகுக்கப்பட்ட சட்டங்களில் விதிகளில், ஏதேனும் ஒன்றை கூட்டியோ குறித்தோ மாற்றியோ பலனை கொடுக்க நவகிரகன்களால் இயலாது என்பதை நாம் தெயவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அரசு வகுத்துள்ள சட்ட திட்டங்களுக்கு ஏற்பவே அரசு ஊழியர்கள் எதையும் செய்ய முடியும் அல்லவா? அதைபலவே நவகிரகங்களும் தமது விருப்பப்படி எந்த வினைப்பயனையும் யாருக்கும், நியதிக்கு மாறாகச் செய்ய முடியாது.
சோதிட நூல்கள், நவகிரகங்கள் நமது சாதகத்தில் நிற்கும் நிலைக்கு ஏற்ப, நமக்குள்ள விதி எப்படிபட்டது என்பதை கூறமுடியுமே அன்றி, நமது உழப் போக்குவதற்கான வழிவகைகளைக் கூறுவதில்லை. நவகிரக சாந்திகள் எனக் கூறப்படுவன அனைத்தும் நமக்கு ஏற்ப்பட்ட ஊழ்வினைத் தொல்லைகளிளிரிந்து நம்மக் காக்கமாட்டா என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். அப்படியானால்,
ஊழ்வினை துயரை நீக்குவது எப்படி?
காத்திருங்கள் அடுத்த பதிவிற்காக

Get this gadget at facebook popup like box
09