அஷ்டமி என்பது எட்டாவது திதி நாள். தேய்பிறையில் வரும் அஷ்டமி திதி மிகவும் விசேஷமாக சொல்லப்படுகிறது. அஷ்டமி விரதம் தொடங்குபவர்கள் மார்கழி மாதத்தில் தேய்பிறையில் வரும் அஷ்டமியில் ஆரம்பிக்க வேண்டும்.
ஒவ்வொரு அஷ்டமிக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. ஆவணி தேய்பிறை அஷ்டமி ஸ்தானுஷ்டமி ஆகும்.
இந்த நாளில் தான் மதுரா சிறைச்சாலையில் வசுதேவர்-தேவகி தம்பதிக்கு எட்டாவது குழந்தையாக கிருஷ்ணன் அவதரித்தார். இத்திருநாள் கிருஷ்ண ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுகிறது.
வடமாநிலங்களில் இத்திருநாளை ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி என்ற பெயரில் விரதமிருந்து கொண்டாடுகிறார்கள். வீடுகளிலும் பகவான் கிருஷ்ணன் பிறந்த நாளை கோலாகமாக கொண்டாடுவார்கள்.
0 Kommentare:
Kommentar veröffentlichen