தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இலச்சினையாக இடம்பெற்றுள்ள கோபுரம் அமைந்துள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு ஆண்டாள்
திருக்கோவிலில் உள்ள வடபத்ர சயனர் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.
108 வைணவ திருத்தலங்களில் புகழ்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆண்டாள் திருக்கோவிலில், மக்களின் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அறிவுறுத்தலின்பேரில், பல்வேறு திருப்பணிகள் கடந்த 6 மாத காலமாக நடைபெற்றன. திருப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வடபத்ர சயனர் கோவில் மற்றும் அதன் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சன்னதி, ஸ்ரீ பெரியாழ்வார் சன்னதி, ஸ்ரீகூரத்தாழ்வார் சன்னதி, ஸ்ரீநம்மாழ்வார் சன்னதி, ஸ்ரீ ஆண்டாள் பிறந்த நந்தவனம், திருக்கோவிலின் ராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு இன்றுகாலை மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள், இவ்விழாவில் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவை யொட்டி, விருதுநகர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா வழிகாட்டுதல்பேரில், பக்தர்களின் வசதிக்காக விருதுநகர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது. கும்பாபிஷேகம் நடைபெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயிலின் கோபுரம், தமிழக அரசின் இலச்சினையாக இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Kommentare:
Kommentar veröffentlichen