உங்களது பிறந்த ஜாதகத்தில் 1,5,7,9 இவ்விடங்களில் ராகு அல்லது கேது
நின்றால் இதுவே பித்ரு தோஷம் ஆகும். மிகக்கடுமையான பிதுர் தோஷம் உடையவர்கள்
ராமேஸ்வரம் சென்று திலா ஹோமம் செய்வது அவசியம்.திலா ஹோமம் எனப்படுவது
நெல்லையும் எள்ளையும் கலந்து செய்யப்படும் ஹோமம் ஆகும்.
வாழ்வில்
ஒவ்வொருவரும் ஒருதடவையாவது காசி, கயா, ராமேஸ்வரம் சென்று பிதுர் ஹோமம்
செய்ய வேண்டும்.
21 பிண்டங்கள்:
பித்ருக்களின் ஆத்மா சாந்தி அடைவதற்காகச் செய்யப்படும் வழிபாட்டைச்
சடங்குகளில், நாராயண பலி எனும் பூஜையும் ஒன்று. அகால மரணம் மற்றும்
துர்மரணம் அடைந்தவர்களுக்கு இந்தப் பரிகாரத்தைச் செய்வார்கள். ராமேஸ்வரம்
தலத்தில் 21 பிண்டங்கள் (ஒரு தலைமுறைக்கு ஒன்று வீதம்) வைத்து
வழிபாடுவார்கள். பவானி கூடுதுறை தலத்தில் 77 தலைமுறையினருக்காக 7
பிண்டங்கள் வைத்து பித்ருகாரியம் செய்வது குறிப்பிடத்தக்கது.
சங்கமேஸ்வரர் வழிபாடு :
அமாவாசை நாளில், பித்ருக்களுக்குக் காரியம் செய்து வணங்கினால், கூடுதல்
பலன்களைப் பெறலாம் என்பது ஐதீகம். அதிலும், தெற்கு நோக்கிச் செல்லும்
புண்ணிய நதியான காவிரி நதியுடன் மேலும் இரண்டு நதிகள் சங்கமிக்கும் பவானி
கூடுதுறையில் நீராடி, பித்ருக்களுக்கான காரியங்களைச் செய்து
ஸ்ரீசங்கமேஸ்வரருக்கு வில்வ மாலை சார்த்தி வழிபட, முன்னோர்களின் ஆசீர்வாதம்
கிடைக்கும்.
காகத்திற்கு உணவிடுங்கள் :
பிதுர் எனப்படும் முன்னோர் வழிபாட்டிலும் காகத்திற்கு முக்கியத்துவம்
உண்டு. காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன்
என்றும் சொல்வதுண்டு. காகத்திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம்
முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பார் என்பது நம்பிக்கை. காகம் நாம்
வைத்த உணவைத் தீண்டாவிட்டால் இறந்து போன நம் முன்னோருக்கு ஏதோ குறை
இருப்பதாக கருதுவதும் மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
வேதாரண்யம் :
தை அமாவாசை தினத்தன்று வேதாரண்யம் கடற்கரை ஓரத்தில் உள்ள கோவிலுக்கு சென்று
அங்குள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடினால், கங்கை, யமுனை, நர்மதை,
சிந்து, காவிரி போன்ற புண்ணிய நதிகளில் நீராடியதற்கு சமம். இதில்
நீராடியவர்கள், தங்கள் பாவங்களைக் கழுவிக் கொள்வதுடன், தங்கள் முன்னோர்
செய்த பாவங்களுக்கும் சேர்த்து, நிவர்த்தி பெற்று வரலாம்
பக்தி கானங்கள்
பிரபலமானவை
ஆன்மீகம்
Banner 180x90
Kathiravan.com » தொழிநுட்பச் செய்திகள்
வகைகள்
ஆலயங்கள்
ஆன்மீகக் கதிர்
சுவிஸ் பேர்ண் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தின் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜை! 2015
சுவிற்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் தேர்த்திருவிழா 2014
Kathiravan.com
கைகொடுப்போம்
கதிரவனின் வளர்ச்சியில் பற்றுள்ள உள்ளங்கள் தங்களின் பங்களிப்பை இங்கே செய்யலாம். நன்றி
0 Kommentare:
Kommentar veröffentlichen