"கோயில் இல்லாத ஊரில் குடியிருக்காதே
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
சூதாட்டத்தையும், சூதான உள்ளத்தையும் விரும்பாதே"
- ஒளவையார
பக்தி எனறால் என்ன
நாம் உலக வாழ்வில் இன்பகரமாக தொடர்ந்து இருக்கவும், அத்துடன்
துன்பத்திலிருந்து தப்பிக்கவும், இறைவன்மேல் நம்பிக்கையை தன் மனதில்
வளர்த்துக் கொள்ள முயற்சிப்பதே பக்தி. நம்பிக்கை இல்லாவிட்டால் பக்தி
வராது. எதிலாவது ஒன்றில் பக்தி இருந்தால் தான் சக்தியே பிறக்கும்.
ஏன் கோயிலுக்குச் செல்ல வேண்டும்?
நாம் நீந்தவேண்டுமென்றால் நீச்சல்குளமோ, ஏரியோ போக வேண்டுமல்லவா, இதுபோல்
பக்தியை வளர்க்க முயற்சிப்பவர் கோயிலுக்குச் செல்லவேண்டும். நல்ல
குருமார்களின் பக்திப் பேச்சினையும் கேட்க வேண்டும். அத்துடன் பக்தி தியான,
ஞான நூல்களையும் படிக்க வேண்டும்.
கோயிலுக்குச் சென்று வருவதால் பக்தி கூடுமா?
நாம் உணர்வுப்பூர்வமாகப் புரிந்து கொள்வதைப் பொருத்திருக்கிறது. பக்தியும்,
ஞானவிளக்கமும் தெரிந்த வழிகாட்யின் உதவியால் கோயிலுக்குச் சென்றால் உண்மை
புரியும், பக்தி கூடும்.
ஒருவர் எப்போது பக்தனாக மாறுகிறார்?
இறைவனை இந்த பூமியில் மனித உருவத்தில் சந்திக்கும்போது.
இறைவனை எப்படிக் கண்டுபிடிப்பது?
முதலில் ஞானகுரு கிடைத்தால் சற்குருவடிவில் இருக்கும் இறைவனை எளிதில் சந்தித்து விடலாம்.
கோயிலில் சிவன், சக்தி, விநாயகர், சுப்ரமணியம் வைத்திருப்பதற்கு விளக்கம் என்ன?
நமது ஜீவனை குருவின் அருளாலும் பயிற்சியாலும் சிவனாக்க வேண்டும். குருவின்
தீட்சையால் நெற்றிக்கண் திறந்து ஜோதி தரிசனம் கிடைக்கும். சக்தி என்ற மனம்
அறிவு என்ற சிவனோடு சேரும் போது மாயசக்தி மறைந்து, கிரியா சக்தியாக மாறி,
ஜீவசக்தி கூடி ஞான ஒளியாக நம்மில் பிரகாசிக்கிறது. உண்மையான பக்தர்களுக்கு
இது கிடைக்கும்.
விநாயகர் என்பது உடல் கூறைக் குறிக்கும். முருகன் என்றால் மும்மலத்தை
வென்றவன். மும்மலத்தை வென்றபின தான் சுப்ரமணியமாக இருப்பார். சுப்ரமணியம்
என்றால் குருவின் தயவால் சற்குருவை அறிந்து உணர்ந்து தனக்குள்ளே கோயில்
அமைத்து அவரை வழிபடுவதாகும். சற்குருதான் பிரம்மம். சுத்த பிரம்மத்தை
உணர்ந்தவரே சுப்ரமணியம்.
புராணம் என்ன சொல்கிறது?
வேதங்கள் சொன்ன நல்ல கருத்துக்களை கதையாக சித்தரித்து மக்களுக்குப் பக்தியையும், ஞானத்தையும் புரிய வைக்கிறது.
கோயிலில் ஞானிகள் இருப்பார்களா?
ஞானிகள் மக்கள் நடமாடும் இடங்களிலெல்லாம் இருப்பார்கள். அவர்கள்
பிச்சைக்காரர் வேஷத்திலும் இருக்கலாம், குடும்பஸ்தர்களாகவும் இருக்கலாம்.
எமது அனுபவத்தில் தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கிறார்கள். கோயில் உள்ள
இடங்களில் நல்ல மனிதர்களுக்கு காட்சி கொடுப்பார்கள்.
ஏன் தமிழ்நாட்டில் சிறப்பான கோயில்கள் இருந்தும் பக்தி முறையாக வளரவில்லை?
பொதுவாக கலியுகமான தற்காலத்தில் இறைவனைப் பிடிப்பது வெகுசுலபம். ஆனால்
இறைவனை மறக்கடிக்க மாயை ஏகப்பட்ட காட்சிகளை ஓட்டிக்கொண்டிருக்கிறது. இதனால்
உண்மையைக் கூறவரும் குருமார்களை மக்கள் மதிப்பதில்லை. உதாரணமாக நல்ல
புத்தகத்திலுள்ள கருத்துக்களை நமது மூளையில் பதிய வைத்துக்கொள்ள வேண்டுமே
தவிர, புத்தக அட்டைப்படத்தை அல்ல. ஒரு குழந்தைக்கு படம் பார்த்து படிக்க
வைப்பதற்குக் காரணம் அந்தப்படத்திலுள்ள பொருள் இன்னது என்று
தெரிவதற்காகத்தான். ஆனால் அந்தப்படத்திலுள்ள பொருளை சாப்பிட முடியாது.
பொருளை கடையில் வாங்குவதற்கு மனதிற்கொரு பயிற்சியாகும்.
இதைபோன்றுதான் இறைவனை அடைய ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு பயிற்சி சிலை
விளக்கமாகக் காட்டப்பட்டிருக்கிறது. இதை உணர்ந்து புரிந்து இந்தப்
பிறவியில் முயற்சிப்பவர்களுக்கு சரியான வாய்ப்பளிக்கும் பள்ளியாக
விளங்குவதே கோயில்.
கோயிலில் ஞான விளக்கங்கள், பக்திக் கதைகள் கூற வேண்டும். அதற்கென்று
முறையான இயக்கம் வேண்டும். மக்களிடம் ஆர்வமும் ஒத்துழைப்பும் வேண்டும்.
குறைகாண்பதிலும், குறைகூறுவதிலும் பொழுதைப் போக்குகின்றனர். சுயஒழுக்கம்
நம்மிடம் நிலைத்து நிற்க வேண்டும். ஒவ்வொருவரும் தன்னைத் தயார்படுத்திக்
கொண்டால் பக்தியும் ஞானமும் நம்மிடம் தானாகவே வளரும்.
பக்தியும் ஞானமும் வளர நம்மை நாம் எப்படித் தயார்படுத்திக் கொள்வது?
மிலிடரி, ஏர்போர்ஸ், போலீஸ் போன்ற வேலைக்குத் தேர்ந்தெடுத்தபின் சரியான
முறையில் உடலையும் உள்ளத்தையும் பயிற்சியால் தயார்படுத்துவது போல் நம்மை
நாம் தியானப் பயிற்சியால் தயார்படுத்த வேண்டும்.
காலையில் எழுந்து யோகாசனங்கள் செய்வது, 3 மணி முதல் 5 மணிக்குள்
உள்ளக்கோயிலில் இறைவனுக்குப் பாத பூசை செய்வது, மந்திரங்கள் சொல்லி
அர்ச்சனை செய்து வருவது யாவும் பக்தியின் வெற்றிப் படிகளேயாகும்.
உங்களுக்குத் திருப்தியான ஞானகுரு கிடைக்கும்வரை சுயமாக எந்தக் கோயில்
பிடிக்கிறதோ அதை உள்ளத்தில் வைத்து அங்கு எண்ணத்தால் இறைவனை தரிசித்து
வழிபட்டு வாருங்கள். நாளடையில் சற்குருவை எந்த வழியிலாவது சந்தித்து
விடுவீர்கள். ஆனால் குருவின் விளக்கமும், வழிகாட்டலும் தான் உங்களை
விரைவில் உயர்த்தும்.
வாழ்க்கையில் எதை வேண்டுமானலும் மறக்கலாம். இறை நினைப்பை மட்டும் மறந்து விடக்கூடாது.
இரை வயிற்றுக்கு
இறை உள்ளத்திற்கு
உள்ளம் கோயில் என்பதை திடமாக நம்புங்கள். நாம் பிறந்து வளர்ந்த குழந்தைப்
பருவமான 8 மாதத்திற்குள் நடந்தது எதுவும் நமக்குத் தெரியாது. ஆனால் எதுவும்
தெரியாத நாம், அம்மா, அப்பா என்று அவர்களை நம்பி அழைக்கிறோம் என்றால்
அவர்கள் சொன்ன சொல்லில் நம்பிக்கை வைத்துத்தான் என்பதை மறுக்க முடியாது.
அதைபோன்றுதான் பூமியில் சற்குருவடிவாக இறைவன் நடமாடுகிறார் என்பதை குருவின்
உதவியால் அறிந்து உணர்ந்து நம்ப வேண்டும். பிறகு எல்லாம் நமக்குப்
புரியும். இறைமார்க்கம் கைகூடும்.
எதையும் புரிந்து செய்தல், உண்மை என்று அறிந்தால் அதை உடனே செய்தல், பிறகு தொடர்ந்து செய்தல் யாவும் பக்திக்கு தூண்போன்றதாகும்.
ஞானத்தின் முடிவு பக்தியாகும்.
பக்தியின் முடிவு ஞானமாகும்.
உண்மை சொல்லும் ஞானகுருமார்களுக்கு சோதனைகள் யாவும் ஞானச் சாதனையாக மாறி
விடும். துன்பம் தூசி போன்றதாகும். உலகம் பொய் என்றறிந்த அவர்களுக்கு மாயை
தள்ளி நிற்கும். இவர்களே பக்தர்களைக் கரைசேர்க்கும் ஞானக் கப்பலோட்டிகள்
ஆவர்.
பிரார்த்தனை செய்யும் எந்த மனிதனும் ஏதேனும் ஒரு புதிய விஷயத்தைக் கற்கத் தவறமாட்டான்.
மனித உடலை கோயிலுக்கு ஒப்பிடுவார்கள்.
சிரசு கர்ப்ப கிரகம்
கழுத்து அர்த்த மண்டபம்
மார்பு மகா மண்டபம்
நாடி யாக சாலை
பாதம் கோபுரம்
வாய் கோபுரம்
உள்நாக்கு கொடிமரம்
பஞ்ச இந்திரியங்கள் தீபங்கள்
இதயம் கர்ப்ப கிரகம்
உயிர் மகாலிங்கம்
மனித உடலும், உள்ளமும் கோயிலாகவும், ஆன்மா வாழும் வீடாகவும் ஞானிகள் வாயிலாகக் கூறப்பட்டுள்ளது.
"வீட்டை கட்டிப்பாரு
திருமணத்தை செய்துபாரு"
என்ற பழமொழியில் உயிரோட்டமான கருத்து அமைந்திருக்கிறது. தன் உள்ளத்தில்
மனதால் வீடுகட்டி இறைவனை திருமணம் செய்து அங்கே அவரை வைத்துப்பார் என்பது
தான் அதன் பொருள்.
இறைவன் ஆண் பாதி, பெண் பாதியாக இருப்பதற்குக் காரணம் மனித மனம் பாதி, மனித
அறிவு பாதியாகும். இதை சரியாக இணைத்து சாமர்த்தியமாக வாழ்வதே தெய்வீக
வாழ்க்கையாகும். இப்படிப்பட்டவர்கள் இந்த உலகிலும், மறுமை உலகிலும்
ஆனந்தமடைவர்.
பக்தி கானங்கள்
பிரபலமானவை
ஆன்மீகம்
Banner 180x90
Kathiravan.com » தொழிநுட்பச் செய்திகள்
வகைகள்
ஆலயங்கள்
ஆன்மீகக் கதிர்
சுவிஸ் பேர்ண் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தின் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜை! 2015
சுவிற்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் தேர்த்திருவிழா 2014
Kathiravan.com
கைகொடுப்போம்
கதிரவனின் வளர்ச்சியில் பற்றுள்ள உள்ளங்கள் தங்களின் பங்களிப்பை இங்கே செய்யலாம். நன்றி
0 Kommentare:
Kommentar veröffentlichen