விநாயகர் சதுர்த்தி விரதத்தை ஒரு கொண்டாட்டமாகவே நாம் பாவிக்கலாம். விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். அதாவது யார் கூப்பிட்டாலும் உடனே ஓடோடி வந்து அருள் தருவார்.
அதனால்தான் அவர் எல்லாருக்கும் பொதுவாகவும், யாரும் சுலபமாக பூஜிக்கும் வகையிலும் இருக்கிறார்.
அதனால்தான் அவர் எல்லாருக்கும் பொதுவாகவும், யாரும் சுலபமாக பூஜிக்கும் வகையிலும் இருக்கிறார்.
இனி கடைப்பிடிக்க வேண்டிய விரதத்தை பற்றி பார்ப்போம்...
விநாயகர் சதுர்த்தி அன்று விடியற் காலையிலேயே எழுந்து, சுத்தமாக குளித்துவிட்டு, வீட்டையும் பெருக்கி மெழுகி சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். வாசலில் மாவிலைத் தோரணம் கட்டலாம். முடிந்தால், இரண்டு வாழைக் கன்றுகளையும் வாசலின் இருபுறங்களிலும் கட்டலாம்.
பிறகு பூஜையறையிலே சுத்தம் செய்த ஒரு மனையை வைக்க வேண்டும். அதன் மேல் ஒரு கோலம் போட்டு, அதன் மேல் ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும். இலையின் நுனி வடக்கு பார்த்தமாதிரி இருப்பது நல்லது. இந்த இலை மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும். பூமியிலிருந்து உருவான எதுவும் பூமிக்கே திரும்பச் செல்லும் எனும் தத்துவம்தான் களிமண் பிள்ளையார்.
களிமண் மட்டும்தான் என்றில்லாமல், உலோகம், கற்சிலை விக்ரகங்களையும் வைக்கலாம். பத்ரபுஷ்பம் எனப்படும் பல்வகைப் பூக்கள் கொண்ட கொத்து, எருக்கம் பூ மாலை, அருகம்புல், சாமந்தி, மல்லிகை என்று எத்தனை வகை பூக்களை வாங்க முடியுமோ, அவரவர் வசதிக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம். அதேமாதிரி முடிந்தளவுக்கு சில வகைப் பழங்களையும் வாங்கிக் கொள்ளலாம்.
இவை எல்லாவற்றையும் விட, விநாயகருக்கு ரொம்பவும் பிடித்தமான மோதகத்தைத் தயார் பண்ணிக் கொள்ளலாம். அதாவது தேங்காய் பூரணத்தை உள்ளே வைத்து செய்யப்படும் கொழுக்கட்டை. இதிலும் ஒரு தத்துவம் இருக்கிறது. மேலே இருக்கும் மாவுப் பொருள்தான் அண்டம். உள்ளே இருக்கும் வெல்லப் பூரணம்தான் பிரம்மம்.
அதாவது நமக்குள் இருக்கும் இனிய குணங்களை மாயை மறைக்கிறது. இந்த மாயையை உடைத்தால் அதாவது வெள்ளை மாவுப் பொருளை உடைத்தால், உள்ளே இனிய குணமான வெல்லப் பூரணம் நமக்குக் கிடைக்கும் (விநாயகருக்கு முதன் முறையாக இந்தக் கொழுக்கட்டையை நிவேதனம் செய்தது வசிஷ்ட முனிவருடைய மனைவியான அருந்ததி).
0 Kommentare:
Kommentar veröffentlichen