கதிரவனுடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்

Powered By Kathiravancom

கோடி மடங்கு பலன் தரும் சந்திர கிரகண மந்திர ஜபம்

கிரகண நேரத்தில் நீங்கள் செய்யும் மந்திர ஜபத்திற்கு கோடி மடங்கு பலன் அதிகம். இந்த நேரத்தை , பெரிய பெரிய சித்தர்களும், ரிஷிகளும் - தவறாமல் பயன்படுத்துவர். அவர்களை பின்பற்றி , நாமும் இறையருளை வேண்டுவோம்..நமது நியாயமான கோரிக்கைகளை அந்த பரபொருள் கண்டிப்பாக நிறைவேற்றும்... !





இந்த பூமி , ஒரு குறிப்பிட்ட அச்சில் , வேகமாக சுற்றுகிறது... அந்த சுற்றும் விசையில் , வேகத்தில் வெளிவரும் சப்தமே - பிரணவ மந்திரமாகிய ' ஓம் " , உலகில் உள்ள அத்துணை மதங்களிலும் - ஒலிக்கப்படும் மந்திரங்கள் அனைத்தும் இந்த பிரணவ மந்திர அதிர்வை ஒட்டியே இருக்கும்.

நமது மந்திர அதிர்வுகள் இந்த மந்திரத்தை ஒட்டி இருக்கும்போது , அபரிமிதமான பலன்கள் நமது ஆன்மாவுக்கு கிடைக்கிறது. ஸ்ருதியும் லயமும் ஒன்று சேர்ந்து நல்ல இசை கிடைப்பது போல ,அந்த இசையை நம் காத்து கேட்பதுபோலே , மனம் ஒன்றுவது போல - மந்திர அதிர்வுகளின் இசையில் இறைவன் உங்களை கவனிக்க ஆரம்பிக்கிறார் .

கிரகண நேரத்தை தவறாமல் பயன்படுத்தி - " ஓம் சிவ சிவ ஓம் " மந்திர ஜெபம் செய்யுங்கள். தன வாழ் நாள் முழுவதும் , ஒரு மிகப் பெரிய ஆன்மீக ஆராய்ச்சி செய்த பெரியவர் திரு . மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் , கண்டறிந்த மந்திரம் இது .... இதை முறைப்படி ஜெபித்து வர , உங்களுக்கு நீங்கள் செல்லும் பாதை , செல்ல வேண்டிய பாதை தெளிவாக தெரிய வரும். கூடிய விரைவில் உங்களுக்கே நீங்கள் தியானம் பண்ண வேண்டிய மந்திரமும், தகுந்த குரு ஒருவர் மூலம் கிட்டும். இறைவனிடம் நீங்கள் என்ன வேண்டுகிறீர்கள் என்பதில் தெளிவாக இருங்கள்.

உங்கள் பிறவியின் நோக்கம் என்ன , அதை எப்படி ஈடேற்றுவது என்கிற அத்தனை விஷயங்களும், இந்த மந்திர ஜெபங்களினால் உங்களுக்கு கிட்டும். மன நிம்மதியும், ஆத்ம திருப்தியும், என்றும் உங்களுக்கு கிடைக்க பரம்பொருள் துணை புரியட்டும் !!

Get this gadget at facebook popup like box
09