வாழ்க்கை ஒரு சொர்க்கம்
அதில் காலடி பதியுங்கள்
வாழ்க்கை ஒரு
பள்ளி அதில் கல்வி பயிலுங்கள்
வாழ்க்கை ஒரு
பரிசு அதைப் பெற்றுக் கொள்ளுங்கள்
வாழ்க்கை ஒரு
பாடல் அதைப் பாடிவிடுங்கள்
வாழ்க்கை ஒரு
வனப்பு அதன் புகழ் பாடுங்கள்
வாழ்க்கை ஒரு
சவால் அதை சமாளியுங்கள்
வாழ்க்கை ஒரு
சாகசம் அதில் துணிவு காட்டுங்கள்
வாழ்க்கை ஒரு
கடமை அதை செய்து முடியுங்கள்
வாழ்க்கை ஒரு
வாய்ப்பு அதைப் பயன்படுத்துங்கள்
வாழ்க்கை ஒரு
வழிகாட்டி அதைப் பின்பற்றுங்கள்
வாழ்க்கை ஒரு
பயணம் அதை தொடருங்கள்
வாழ்க்கை ஒரு
வாக்குறுதி அதைக் காப்பாற்றுங்கள்
வாழ்க்கை ஒரு தெய்வீகம்
அதைப் புரிந்துகொள்ளுங்கள்
என்னால்
எதுவும்
முடியாத
- இது கோழைத்தனம்
என்னால் எல்லாமெ
முடியும் - இது
அகங்காரமான
முட்டாள்தானம்.
எது என்னால்
மடிய வேண்டுமோஅதனை
முடிக்க என்னால்
முடியும். கடவுள்
கருனண இருந்தால்
என்பதே சரியான
வாழ்க்கைப் பாதை.
தன்னம்பிக்கை
இறகுகளைப் பறவைகள் பாரமாகக் கருதலாமா? பொறுப்புக்களே உங்களை உயர்த்தும் இறகுகள் பொறுப்புக்களைப் பாராமாகக் கருதாதீர்கள்.
எண்ணங்கள்
தூய மனமே சிந்த எண்ணங்களின் தாய்வீடு, செயலைக் கொண்டு ஒருவரை மதிப்பிட முடியாது செயலுக்குப் பின்னால் உள்ள மனநிலையே மதிக்கத்தக்கது. அந்த எண்ணங்களின் பிறப்பிடம், இருப்பிடம், ஏன் இறப்பிடம் எல்லாமே மனம் தான் அதைப்பொறுத்தே உயர்வு் உள்ளதஇதனையது உயர்வு.
கல்வி
கல்வி எதை சாதிக்க வேண்டும்? படிக்கப்படிக்க என்ன தெரிய வேண்டும்? ஆஹா இவ்வளவு நாள் நாம் எவ்வளவு பெரிய முட்டாளாக இருந்தோம் என்பதைத்தான் படிப்ப வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும். அறிவு வளர வளர அகம்பாவம் கரைய வேண்டும்.
ஞானம்
"நான் ஏன் பிறந்தேன்?" என்னும் கேள்வி உங்களை வாழ்க்கையின் உள்ளார்நஇத பகுதிகளுக்கு அழைத்துச் செல்லும் தன்மை வாய்ந்தது. வாழ்வின் பல மர்ம முடிச்சுக்களை இக்கேள்விக்கு விடை தேடத் தொடங்குவதன் மூலமாக அவிழ்த்து விட முடியும். பல ஞானிகளும் இக் கேள்வியைத் தங்களுக்குள்ளாகவே கேட்டுக் கொண்டுதான் ஞானத்தின் கதவுகளைத் திறந்தார்கள். ஆன்மிகத் தேடலாய் இருந்தாலும் சரி, உலகியல் தேடலாய் இரந்தாலும் சரி இந்தக் கேள்வியை ஆரம்பமாகக் கொண்தான் அந்தத் தேடல்கள் தொடங்கியிருக்கும்.