கதிரவனுடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்

Powered By Kathiravancom

கடவுளா நீ கல்லா, பெரியார் படப் பாடல்

 கடவுளா நீ கல்லா
 கடவுளா நீ கல்லா

 மேலோர் என்று சிலரை படைத்து
 கீழோர் என்று பலரை படைத்தால்
 கடவுளா நீ கல்லா

 நாயும் பூனையும் நடந்த்தால் புண்ணியம்
 மனிதர் நடந்த்தால் பாவம் என்றால்

 கடவுளா நீ கல்லா

 தண்ணீர் விழுந்தால் பாறையும் கரையும்.
 எங்கள் கண்ணீர் விழுந்தும் கறையவில்லையே

 கடவுளா நீ கல்லா

 எங்கள் நிலங்களை அபகரித்தீர் அபகரித்தீர் அபகரித்தீர்
 எங்கள் குலங்களை மறுதலித்தீர் மறுதலித்தீர் மறுதலித்தீர்

 கால்நடை உலவிடும் வீதியில் எங்கள் கால்களை அபகரித்தீர் அபகரித்தீர்
 வெளவ்வால் நுழைகிற கோவிலில் எங்கள் வாசலை அடைத்துவிட்டீர் அடைத்துவிட்டீர்
 சூத்திரன் நுழைந்திட சாத்திரம் இல்லை என்று சூத்திரம் எழுதிவிட்டீர் சூத்திரம் எழுதிவிட்டீர்

 நீங்கள் மட்டும் நீங்கள் மட்டும் விந்து விழுந்து பிறந்தவர்கள்
 நாங்கள் என்ன நாங்கள் என்ன எச்சில் விழுந்தா பிறந்தவர்கள்

 கடவுளா நீ கல்லா
 கடவுளா நீ கல்லா

 இந்த கோவிலை அமைத்தது யார் அமைத்தது யார் அமைத்தது யார்
 உச்சியில் கோபுரம் சமைத்தது யார் சமைத்தது யார் சமைத்தது யார்

 எங்கள் கைகளும் கால்களும் தீண்டியிராவிடில் கோவில்கள் ஏதுவும் இல்லை
 எங்கள் தோளைத்தொடமால் கடவுளர் யாரும் கருவறை சேர்ந்ததில்லை

 உறுதியில் உழுதவன் வேர்வையிடாவிடில் பூசைகள் ஏதுவும் இல்லை பூசைகள் ஏதுவும் இல்லை
 மனிததர்மங்கள் பொதுவாகட்டும் மனுதர்மங்கள் உடையட்டும் மனுதர்மங்கள் உடையட்டும்

 வானவில்லில் மட்டும் இனி வர்ண பேதம் இருக்கட்டும் வர்ண பேதம் இருக்கட்டும்

 கடவுளா நீ கல்லா

 மேலோர் என்று சிலரை படைத்து
 கீழோர் என்று பலரை படைத்தால்

 கடவுளா நீ கல்லா

 நாயும் பூனையும் நடந்தால் புண்ணியம்
 மனிதர் நடந்த்தால் பாவம் என்றால்

 கடவுளா நீ கல்லா

 தண்ணீர் விழுந்தால் பாறையும் கரையும்.
 எங்கள் கண்ணீர் விழுந்தும் கறையவில்லையே

 கடவுளா நீ கல்லா                                                

Get this gadget at facebook popup like box
09