கதிரவனுடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்

Powered By Kathiravancom

மக்கள் காளிக்கு பயந்தது ஏன்?

ஒரு காலத்தில் காளிகோயில், துர்கை கோயில் என்றால் அதன் பக்கமே யாரும் போக மாட்டார்கள். அது பலி வாங்கி விடும், ரத்தத்தை குடித்து விடும் என்றெல்லாம் வதந்திகள் பரப்பப்பட்டதுண்டு.
 
 
 
 
 
இந்த வதந்திக்கு காரணமானவர்கள் யார் தெரியுமா ? சாட்சாத் நமது பஞ்ச பாண்டவர்கள் தான். துரியோதனனிடம் சூதாடி நாட்டை இழந்தனர். அது மட்டுமின்றி , அவர்கள் காட்டுக்கு சென்று 12 ஆண்டுகள் யார் கண்ணிலும் படாமல் வாழ வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

தவ முனிவர்களைத் தவிர மற்றவர் கண்ணில் பட்டால், அவர்களின் வனவாசம் மேலும் நீட்டிக்கப்படும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது. அர்ஜூனன் தனது வலிமை மிக்க ஆயுதங்களை ஒரு வன்னி மரத்தின் புதரில் ஒளித்து வைத்தான். காலம் வரும் போது அவற்றை எடுத்துக் கொள்ளலாம் என இருந்தனர். அந்த வன்னிமரம் தான் அவர்கள் வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்த ஆயுதங்களைப் பாதுகாக்கும் பெட்டகமாக இருந்தது.

அவர்கள் முனிவர்களின் ஆலோசனையின் பேரில், துர்க்கை அல்லது காளியின் இருப்படிமான குகைகளில் மறைந்து வாழ்ந்தார்கள். அந்த கோயில்களுக்குள் பயந்து போய் யாரும் நுழைவதில்லை. பாண்டவர்களுக்கு இனி வசதியாயிற்று. அஞ்சாநெஞ்சம் கொண்ட அவர்களைப் பாராட்டி பராசக்தியின் வடிவமான அந்த காளிதேவியே காட்சி கொடுத்தாள். காளியின் காட்சியை மனக்கண்ணால் கண்டால் கூட போதும். அவர்களைத் துன்பம் தொடராது. ஏழ்மை என்பதே இருக்காது. துக்கம், பயம் இதெல்லாம் நெருங்காது.

மகரிஷியால் உபதேசிக்கப்பட்ட 27 ஸ்லோகம் கொண்ட துர்கா நட்சத்திரமாலிகா ஸ்துதியை பக்தியுடன் ஒன்பது இரவுகள் சொன்னார்கள். அந்த இரவுகளே நவராத்திரி ஆயிற்று. அவர்களை அவள் ஆசிர்வதித்தாள். வெற்றிக்கு துணை நின்றாள். ஆனால் குற்றம் செந்தவர்களைதான் காளி தண்டிப்பாள்

Get this gadget at facebook popup like box
09