கதிரவனுடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்

Powered By Kathiravancom

பிரம்மன் உருவான கதை…..

பிரம்மதேவனின் பிரதாபங்கள்

சாவித்திரி, சரஸ்வதி, காயத்திரி. இந்த மூவருக்கும் மணாளன் பிரம்மன்.

தன்னைப்படைத்த சிவனிடம் போய் ‘உன்னைப் படைத்தவன்’ நானடா! என்று வீரம்பேசியிருக்கின்றான் இவன். ‘அஞ்சு தலைப் பேர்வழியே அஞ்சாமல், ஆராயாமல் என்ன வார்த்தையடா சொன்னாய்?’ என்றவாறு ஒரு

தலையைக் கிள்ளி உதறினான் சிவன்; மிகுந்ததுதான் நான்கு தலைகள்.

விநாயகனின் மனைவிகளாகக் கூறப்படும் சித்தி, புத்தி இரு வரும் இவனது இன்பப்பாய்ச்சலின் இளம்பயிர்கள் -அதாவதுமகள்கள்.

நடனமாடும் நாரீமணி ஒருத்தி; அவள் பெயர் உருப்பசி. அவளது நடனத்தைப் பார்த்த பிரமனுக்கு பசி உருவானது. அருகில் வர ஆணையிட்டாள். அவள் ஆட்டம் ஓய்ந்து, இவன் ஆட்டம் துவங்கியது.

துள்ளல் – துவளலாய் மாறியதும், சிந்திச் சிதறிய விந்துத் துளிகளைத் திரட்டி, குடம் ஒன்றில் அடைத்தான் பிரம்மன். அக் குடத்தின் விந்து அகத்தியன் என்னும் ஆளாக மாறியது.

அசுவமேத யாகத்தை ஒருமுறை செய்தான். யாகத்தை வேடிக்கை பார்க்கத் தேவர்களின் பத்தினிகளும் வந்திருந்தனர். அந்த அழகிகளின் அழகில் கிளர்ச்சியுற்ற பிரம்மன், தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாதவனானான். வீரியம் பீறிட்டடித்தது. அக்கினிக் குழியில் அந்த விந்துப் பெருக்கினை வார்த்தான். இதிலிருந்து பிறகு, ஆங்கீரசர், அத்ரி, மரீசி, புலஸ்தியர், புலகர் மற்றும் வசிட்டர் ஆகிய தவசிரேஷ்டர்கள் உதித்தனர்.

மாரீசன் என்பவனுக்கு ஆறு பிள்ளைகள் . இந்த ஆறு பிள்ளை களும் சரியான சுட்டிப்பயல்கள். பெற்ற மகளைப் பெண்டாண்ட பெரியவன் என்று இந்தச் சுட்டிப்பயல்கள் பிரம்மனுக்குச் சூடு கொடுத்தனர்; கைகொட்டிச் சிரித்தனர். எரிச்சலுற்ற பிரம்மன், “அசுரர்

களாவீர்”எனச் சாபந்தந்து கோபந்தணிந்தான்.

திலோத்தமையைப் படைத்ததும், மோகங்கொண்டு அவளை விரட்டினான். பிடிபடாமல் ஓடினாள் திலோத்தமை. பிரம்மன், அவளைப் பிடித்தானா? நினைத்த கதையை முடித்தானா என்பதன் தகவல்கள் கிடைக்கவில்லை.

சரஸ்வதியுடன் ஒருமுறை ஊடல்கொண்ட பிரம்மன், “பூமியில் பிற புலவனாய்ப் பிழை”எனச் சாபங்கொடுத்தான். அதுவும் ஒரு உருவில் அல்ல ; நாற்பத்தெட்டு உருவில். இந்த நாற்பத்தெட்டு உருவங் கள் தான் சங்ககாலப் புலவர்களாம்.

இதுபோல் 68 செய்திகளைத் தாங்கித் தருகிறது அபிதான சிந்தாமணி யின் 1133ஆம் பக்கமும், அதன் பக்கத்துப் பக்கங்களும்.

பக்திப் பழங்கள், சிந்தனைக்குச் சில நிமிடங்களை ஒதுக்க, சில கேள்விகள்;

1) மூவரை மணந்தவன் கடவுள், இதிலும் யோக்கியத்தனம் யோசித்தாலும் புலப்படவில்லை . ஏகபத்தினி விரதத்தை ரு கடவுளே ஏப்பம் விடலாமா?

2) படைத்தவனிடம் போய், வாய் நீளம் காட்டி தலை ஒன்றை

பறிகொடுத்தவன் பிரம்மன். இவனைக் கும்பிட்டு எதைச்

சாதிக்க இயலும் என்று கருதுகிறீர்கள்? தன் தலையைத் தந்து

விட்டுத் தவித்துத் துடித்தவன், பக்தர்கள் ஆசையை எப்படிப்

பூர்த்தி செய்வான்?

3) அழுக்கில் பிறந்த ஒரு ஆபாசக் கடவுளுக்குச் சித்தி, புத்தி

மூலம் மாமனாய்ப் பிரம்மன் மாறியதுபோல் -கைகாலற்ற

அவலட்சண ஆண் பிள்ளைகளுக்கு மாமன் பட்டம் சுமக்க,

பிரம்மனின் பின்னோடிகள் பின் வாங்காதிருக்க முடியுமா?

4) நடனமாடுவளைப் பார்த்து, நாக்கில் எச்சில் வடித்த இரண்டாம்

நிலை ரசனைக்காரனின் பக்தர்களே!

அண்மையில் ஆகிவந்த “டெஸ்ட் ட்யூப் பேபி”க்கு (சோதனைக் குழாய்க் குழந்தை) பிரம்மனின் குடத்துக் குழந்தைதான் (அகத்தியன்) கண்டுபிடிப்புக் கரு எனப் பீற்றிக்கொள்ளுங்களேன்.

ஆகாய விமானத்தின் ஆதாரமெல்லாம் தஞ்சை சரஸ்வதி

மகாலின் ஏட்டுச் சுவடித் தகவல் எனத் தம்பட்டம் அடிக்கும்

கூட்டத்திற்கு இதுவும் ஒரு பிடிப்புத்தானே! வெட்கங்

கெட்டவர்களே!

5) யாகத்திற்கு வந்த அயலானின் பத்தினிகளைப் பார்த்த

மாத்திரத்தில் ‘ஸ்வப்பன ஸ்கலிதம்’ கூட இல்லை; விழித்த

நிலையிலேயே விந்தை கழித்துக் கட்டுபவன் தான் கடவுளோ?

இதைத் தீயில் வார்த்து ரிஷிகளை உருவெடுத்த பிரதாபம்

நிச்சயமாக விஞ்ஞான ஆய்வுக்கு அனுப்புவதற்குரியதுதான்!

அப்படித்தானே?

6) பெற்றவளைப் பெண்டாள்வது தவறில்லை. அதைச் சொன்னது

தான் தவறா? சொன்னதற்குச் சாபமா?

7) பாவையைப் படைத்து படுக்க வா எனக் குழைபவன் தான்

பிரம்மன்.

இவனுக்குப் பக்தனாய் இருப்பது எந்தவகையில் சரி?

சரஸ்வதி 48 உருக்களைக் கொண்டு, சங்கப் புலவர்களாய்

மாறிய கூற்றிற்குக் கேள்விகள் தேவையில்லை, ஒருசொல்

போதும் -

அந்த சொல் தந்தை பெரியாரின் காட்டமான சொல்

“தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி.”

Get this gadget at facebook popup like box
09