கதிரவனுடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்

Powered By Kathiravancom

வீடு மனை அல்லது காலிமனை வாங்கச் செல்லும்போது கவனிக்க வேண்டிய சகுனங்கள்!

வாஸ்து பகவான்

நல்ல சகுனங்கள் : நீங்கள் காலிமனை வாங்கும் போது பின்வரும் சகுனங்களில் ஒன்றை கண்டால் கட்டிடப்பணி சிறப்பாக மிக விரைவில் நடந்தேறி முடியும். நாதஸ்வர மங்கள இசை, கல்யாண கோலம், ஆலயமணி ஓசை, திருமணத்திற்கு பெண்


அழைத்துச் செல்லுதல், கோயில் அல்லது திருவிழா பூஜை, தம்பதிகள் ஜோதியாக எதிரே வருதல்,பசுமாடு எதிரில் வருதல், பசு-கன்று சேர்ந்து வருதல். நாய் சந்தோஷமாக விளையாடுதல், திருமணத்திற்குப் பெண் பார்க்கச் செல்லுதல்.

கோவில் பூஜைப் பொருட்கள் கொண்டு செல்லுதல். பெண் பூப்படையும் செய்தி. குழந்தை பிறந்த செய்தி கேட்டல், சலவை செய்த துணியை கொண்டு வருதல். தெய்வ விக்கிரகங்கள் வீதி உலா வரும் காட்சி. கன்னிப்பெண் நிறைகுடமாக தண்ணீர் கொண்டுவரும் காட்சி. பூ மாலை கொண்டு வரும் காட்சி. பிரசவம் முடிந்து குழந்தையை கொண்டு வரும் காட்சி. திருமணம், கிரகப்பிரவேசம். பூணூல் கல்யாணம் ஆகியவற்றைக் காணுதல்.

தீய சகுனங்கள் : நீங்கள் காலிமனை வாங்கச் செல்லும் போது பின்வரும் தீய சகுனங்களை சந்திக்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள், சாலையில் சண்டை போடுதல், தகராறு நடந்துக் கொண்டிருத்தல். நாய்கள் அல்லது மிருகங்கள் சண்டையிடுதல். பெண் தலைவிரி கோலமாக இருத்தல், எலும்புத் துண்டு இருத்தல்.

துக்கச் செய்தி அல்லது கேட்ட செய்திகேட்டல், அழுக்குத் துணியை கொண்டு செல்லுதல். இறந்தவர்களுக்கு காரியம் செய்யச் செல்வோரைக் காணுதல். ஒற்றைக் கண் உடையவரைப் பார்த்தல். மரம் சாய்ந்து கிடப்பதை அல்லது வெட்டி கிடப்பதை பார்த்தல். விபத்துக் காட்சிகளைப் பார்த்தல்.

Get this gadget at facebook popup like box
09