கதிரவனுடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்

Powered By Kathiravancom

திருமண தடை நீக்கும் அக்னீஸ்வரர் கோவில்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டியில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது தேவன் குறிச்சிமலை. இங்கு இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலம் உள்ளது. தேவன் குறிச்சியை வைத்து தான் டி.கல்லுபட்டி என அழைக்கப்படுகிறது.




இந்த மலையில் புகழ்பெற்ற ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆலயம் உள்ளது.

ஆறாம் நூற்றாண்டில் நடந்த சம்பவம் இது. தே.கல்லுபட்டி அருகே உள்ள ஆவுடையாபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகதேவர். இவர் மாடுமேய்க்கும் தொழில் செய்துவந்தார். தனது மாடுகளை தினமும் தேவன்குறிச்சி மலையின் அடிவாரபகுதியில் மேய்த்து வந்தார். அனைத்து மாடுகளும் அதிகளவில் பால் கொடுத்திருக்கிறது.

ஆனால் ஒரு மாடுமட்டும் பால் சரியாக கொடுக்கவில்லை. ஏன் என அவர்அடுத்த நாள் அந்த மாட்டை பின் தொடர்ந்து சென்றார். அந்த மாடு மலையின் நடுப் பகுதியில் உள்ள பாறையில் மாடு தானாகவே பாலை சொரித்து கொண்டிருந்தது. சத்தம் போட்டு மாட்டை விரட்டி அடிக்க மாடு அங்கிருந்த கல்லில் மிதித்து ஓடியது.

மாடுபால் சுரந்த இடத்தை பார்த்தபோது அப்பாறையில் உள்ள கல் முழுவதும் ரத்தமாக காட்சியளித்தது. அதிர்ச்சி அடைந்த அவர் அப்பாறையின் மண்ணை விலக்கி விட்டு பார்த்த போது சுயம்பு வடிவில் லிங்கமாக சிவபெருமான் காட்சியளித்தார். உடனடியாக இது குறித்து அரசர் மாறவர்ம சுத்தரபாண்டியனிடம் கூறியுள்ளார்.

அரசர் அந்த இடத்தை பார்த்து அருள் மிகு அக்னீஸ்வரர் கோமதி அம்மன் ஆலயம் அமைத்ததாக கூறப்படுகிறது. மேலும் அரசர் ஆறுமுக தேவர் வம்சாவளியினர் தான் இந்த கோவிலுக்கு பால் கொண்டுவந்து அபிஷேகம் செய்ய வேண்டும் என கூறியதாக தெரிகிறது. அன்றிலிருந்து இன்றுவரை அவரது வீட்டில் இருந்து தான்பால் கொண்டு வந்து அபிஷேகம் நடைபெறுகிறது.

இந்த கோவில் மதுரையில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ரோட்டின் இருபுறமும் தாமரைகள் நிறைந்த குளம் உள்ளது. இந்த குளத்தின் கரையில் விநாயகர் கோவில் உள்ளது. இக்குளத்தில் குளித்துவிட்டு சாமி தரிசனம் செய்தால் திருமண தடை நீங்கும். திருமணமாகதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

இதன் அருகே சுனைநீர் உள்ளது. இந்த சுனைநீரை இரண்டாக பிரித்து இறைவனுக்கு அபிஷேகம் செய்யவும் மற்றொன்று பக்தர்கள் பருகவும் உள்ளது. குளத்திற்கு வலது புறம் படிக்கட்டில் ஏறினால் மேற்கு பார்த்த நிலையில் சுயம்பு வடிவமாக சிவன் காட்சியளிக்கிறார். மேற்கு பார்த்து இருப்பது இங்குள்ள சிறப்பாகும்.

சிவன் சன்னதியை அடுத்து தாயார் கோமதி அம்மன் சன்னதிக்கு செல்லாம். அம்மன் சன்னதிக்கு இடப்புறம் குன்றின் மேல் முருகன் கோவில் உள்ளது. சன்னதியின் வலதுபுறமாக வலம் வந்தால் பசுமாடு சிவலிங்கத்துக்கு பால் சொரிந்த காட்சியினை சிலை வடிவில் காணலாம். கோவிலின் மலை உச்சியில் பெருமாள் கோவில் உள்ளது.

மலைக்கு செல்லும் போது மலையின்நடுவே குகையையும், சமணர் படுக்கை காணலாம். இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமி அன்று திருவிழா நடைபெறும். திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

Get this gadget at facebook popup like box
09