பொதுவாக மக்கள் அதிக பாதிப்பிற்கு உள்ளாவது பொருளாதார சிக்கல்களால் தான். ஒருவரால் ஏமாற்றப்படுவது அல்லது அவர்கள் நியாயமற்ற வகையில் நமது சொத்துக்களை அபகரிப்பது, திரும்பி வராத நீண்ட நாள் கடன்கள் உள்ளிட்ட நிறைவேறாத நியாயமான பொருளாதார பிரச்சினைகள் தீரவும்,
சனி தோஷத்தால் அவதியுறுபவர்கள் அதிலிருந்து விடுபடவும், அதன் தாக்கம் குறையவும் விரதமிருந்து ஸ்ரீ சொர்ண ஆகர்ஷன பைரவரை தேய்பிறை அஷ்டமியிலும், ராகு காலம் சனி ஓரையிலும் வழிபடுவது சிறப்பு.
மேலும், தேய்பிறை அஷ்டமி மற்றும் ஞாயிற்றுக் கிழமை மாலைவேளையில் சனி ஓரையில் உள்ள ராகு காலத்திலும் சொர்ண ஆகர்ஷன பைரவரை வழிபடுவது சிறப்புக்குரியது. அப்போது நடைபெறும் பூஜைகளில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், பால், தேன், இளநீர், பன்னீர், திருமஞ்சனம் பொடி, மஞ்சள், சந்தனம், பச்சரிசி மாவு ஆகிய அபிஷேகப் பொருட்களுடன் செவ்வரளிப் பூவையும் பூஜைக்காக அளிப்பது நற்பலன்கள் பல தரும்.
இந்த அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடைபெறும் போதும், அதனை தொடர்ந்து பக்தர்களால் வழங்கப்பட்ட செவ்வரளிப் பூக்களை கொண்டு பூஜை நடத்தப்படும் போதும் பைரவர் மூலமந்திரத்தை மன முருக பிரார்த்தனை செய்ய வேண்டும். இவ்வாறு நாம் செய்யும் பிரார்த்தனை நம் துன்பங்களைப் போக்கி வளமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்பது ஐதீகம்.
0 Kommentare:
Kommentar veröffentlichen