கதிரவனுடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்

Powered By Kathiravancom

கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்?

 உலோகத்தின் ஆற்றலை விட கருங்கல்லின் ஆற்றல் பல மடங்கு அதிகமானது. எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக் கொள்ளும் தன்மை உடையது கருங்கல். இதில் நீர்,நிலம் ,நெருப்பு , காற்று,ஆகாயம் எனும் பஞ்ச பூத தன்மைகள் அடங்கியுள்ளது.

இது வேறு எந்த உலோகத்திலும் வெளிபடுவது இல்லை.
நீர்:

கல்லில் நீர் உள்ளது.எனவே தன் தனது இயல்பான குளிர்ந்த நிலையிலிருந்து மாறாமலிருக்கிறது. கல்லில் நீருற்று இருப்பதை காணலாம்.

நிலம்:

பஞ்ச பூதங்களில் தத்துவங்களில் ஒன்றான நிலம் உள்ளது. எனவே கல்லில் செடி கொடிகள் வளர்கின்றன.

நெருப்பு:

கல்லில் நெருப்பின் அம்சமும் உண்டு. கற்களை உரசினால் தீப்பொறி பறக்கிறதே சான்று.

காற்று :

கல்லில் காற்று உண்டு. எனவே தான் கல்லில் தேரை கூட உயிர் வாழ்கிறது.

ஆகாயம்:

ஆகாயத்தைப் போல் ,வெளியிலிருக்கும் சப்தத்தை தனக்கே ஒடுக்கி பின் வெளியிடும் சக்தி கல்லுக்கு உண்டு. எனவே தான் கருங்கல்லில் கட்டப்பட்ட'கோவில்களில் நாம் கூறுவதை எதிரொலிக்கும் அதிசயம் நடக்கிறது.

இக்காரணங்களினால்,இறை வடிவங்களை பஞ்ச பூதங்களின் (ஐம் பூதங்களின்) வடிவில் இருக்கும் கருங்கல்லில் வடிவமைத்து வழிபாடு செய்கிறோம்.

அபிஷேகம்,அர்ச்சனை,ஆராதனைகள் முறைப்படி செய்யும் போது , ஒரு கோவிலின் பஞ்சபூதங்களின் தன்மை அதிகரிக்கின்றன. அக்கோவிலில் நாம் வணங்கும்போது , நம் உடலில் நல்ல அதிர்வுகள் உண்டாகி, அதன் மூலம் நம் வாழ்வில் நல்ல பலன்கள் உண்டாகின்றன.

பெரும்பாலும் தெய்வ சிலைளை உலோகங்களில் செய்யாமல், கருங்கல்லால் செய்கிறார்கள்.அதற்கு முக்கியமான காரணம் உண்டு.

ஆகம விதிகளின் படி கருங்கல்லால் கட்டப்பட்ட பழங்காலக் கோவில்களிலும், வேத,ஆகம ,சிற்ப சாஸ்திர முறைப்படி,யந்திர ஸ்தாபனம் செய்து, தெய்வ உருவங்களை கருங்கல் சிலையாக பிரதிஷ்டித்து தினமும் முறையாக பூஜை செய்து வரும் கோவில்களுக்கும் நாம் சென்று தரிசனம் செய்யும் வேளையில்,நம் உடலில் ஓர் சக்தி ஊடுருவிச் செல்வதை அனுபவ பூர்வமாக பலர் உணரலாம். ஆகவே தான்,பெரும்பாலும் சிலைகளை கருங்கல்லில் வடிவமைக்கிறார்கள்.

Get this gadget at facebook popup like box
09