கதிரவனுடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்

Powered By Kathiravancom

கொலு வை‌க்கச் ‌சில கு‌றி‌ப்புக‌ள்

கொலு வை‌‌ப்ப‌தி‌ல் ப‌லரு‌ம் பல வ‌ழிமுறைகளை‌க் கடை‌பிடி‌க்‌கி‌ன்றன‌ர். ம‌ற்றவ‌ர்க‌ளி‌ல் இரு‌ந்து த‌ங்களது கொலு ‌சிற‌ப்பானதாக இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று பலரு‌ம் ‌விரு‌ம்பு‌கிறா‌‌ர்க‌ள். அ‌வ்வாறு ‌எ‌ண்ணு‌ம் எ‌ங்களது வாசக‌ர்களு‌க்கு எ‌ங்களா‌ல் முடி‌ந்த ‌ஒரு ‌சில கு‌றி‌ப்புகளை இ‌ங்கே‌ தரு‌கிறோ‌ம்.





கு‌றி‌ப்புக‌ள்
*** கொலுவில் முக்கியமானது கலசம். தங்கக் கலசமாய் வைத்தால் கொலு பார்ப்பதற்கும் அழகாயிருக்கும்! நிஜத் தங்கம் இப்போது வாங்குகிற விலை இல்லை. ஆகவே தங்கம் போல மினுக்கும் சம்கிகளைக் கொண்டு செய்யலாம். சிறிய ப்ளா‌ஸ்டி குடம் வாங்குங்கள். சொம்பு சைசில் கடைகளில் இது கிடைக்கும்.. ப்ளா‌ஸ்டிக் மாவிலை 5 நல்ல பச்சை நிறத்தில் வாங்கிக்கொள்ளுங்கள்.
தங்க நிற சம்கிகள் சிறு இலை வடிவில் கிடைக்கும் இதை குண்டூசியால் குடம் முழுவதும் நெருக்கமாய் குத்தி விடுங்கள். குடத்தின் வாய்ப் பகுதிக்கு வெள்ளி நிற லே‌ஸ் கிடைக்கும். அதைக் குடத்தின் வாய் அளவுக்கு கத்திரித்து பெவிகால் தடவி ஒட்டிவிடுங்கள். மாவிலைகளைக் குடத்தின் மேல் செருகிவிட்டு, ஒரு தேங்காயை நடுவில் வையுங்கள். தங்கக் கலசம் தயா‌ர்.
*** கொலுவிற்கு 4 நாட்கள் முன்னதாகவே தோட்டத்திலோ, தொட்டியிலோ கேழ்வரகு கடுகு தெளித்து வையுங்கள். இவை முதல் நாள் கொலுவுக்கு செழித்து வளர்ந்திருக்கும். அந்தப் பயிர்களை அப்படியே தாய்மண்ணோடு எடுங்கள். பழைய அட்டைகளை முக்கோண அ‌ல்லது சதுர அ‌ல்லது செவ்வக வடிவில் கத்திரித்து வளர்ந்த பயிர்களை அதன் மீது சீராக வையுங்கள். இரண்டொரு நாளில் அவை மேலும் வளர்ந்து புது‌ப் பொலிவினைத் தரும்!
*** பார்க் அமைக்கும் போது உபயோகித்த கொசு மேட்களை தரையில் வைத்தால் ப்ளாட்பார்ம் போல தெரியும். உலர்த்திய காபிப் பொடியால் தார்ச் சாலை நடுவில் அமைக்கலாம்.
***சிறு பிளா‌‌ஸ்டிக் கிண்ணங்களில் மண்ணை நிரப்பி, அதில் வீட்டுத் தோட்டத்தில் வளரும் சிறு செடிகளையோ அல்லது கொத்தாய் புற்களையோ வைத்து பார்க்கில் இயற்கையான தொட்டிச் செடிகள் செய்யலாம் அவ்வப்போது நீர் தெளித்தால் போதும் இவை பசுமையாய் இருக்கும்.
***பு‌த்தக‌த்‌தி‌ன் அ‌ட்டை‌ப் ப‌க்க‌த்‌தி‌ல் வரும் பெரிய கோபுரப் படங்களை அப்படியே கட் செய்து அட்டையில் கவனமாய் ஒட்டி கொலு முகப்பில் வைக்கலாம்.
***கொலுவிற்கு வருபவர்களுக்குக் கொடுக்கும் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், ஒரு ரூபாய் நாணயம் போன்றவற்றைச் சிறு கவரில் போட்டு வைத்து விட்டால், தனித் தனியாய் தேட வேண்டிய அவசியம் இருக்காது.

Get this gadget at facebook popup like box
09