கதிரவனுடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்

Powered By Kathiravancom

வாஸ்து முறைப் படி பூஜை அறை அமைப்பது எப்படி?

 பூஜை அறையின் உட்கூரைப்பகுதி வீட்டின் உட்கூரைப்பகுதியை விட தாழ்வாகயிருக்க வேண்டும். வாஸ்து முறைப் படி பூஜை அறையின் கதவை உச்சத்தில் அமைக்க வேண்டும். வாஸ்து முறைப் படி பூஜை அறைக்கு இரட்டைக் கதவுகள் தான் போட வேண்டும்.




கதவுகளில் சிறுசிறு துவாரங்களை அமைத்து அத்துவாரங்களில் மணிகளைத் தொங்கவிடும் போது மிகவும் சிறந்த பலன்கள் உண்டாகம், மணியோசை சகல ஐஸ்வர்யங்களையும் வீட்டிற்குள் கொண்டு வரும். பூஜை அறையின் வடக்கில் ஒரு ஜன்னலை வைக்க வேண்டியது அவசியம். அப்படி ஜன்னல் அமைக்கும் போது அதன் வழியே சூரிய ஒளி பூஜை அறைக்குள் வரும், இதனால் நன்மைகள் உண்டாகும்.

வாஸ்து முறைப் படி பூஜை அறையின் வடகிழக்குப் பகுதியில் அதிக பாரத்தை வைக்க கூடாது, வாஸ்து முறைப் படி பூஜை அறைக்குள் வடகிழக்கு மூலையில் மாடம் அமைக்கக் கூடாது.

பூஜை அறையின் மேற்குச் சுவரில் ஜன்னல் வைக்கக் கூடாது, வாஸ்து முறைப் படி மேற்குச் சுவரில் பூஜை சம்பந்தப்பட்ட பொருட்கள். விக்ரங்கள். படங்களைத் தவிர வேறு எந்த பொருளையும் வைக்கக் கூடாது. படுக்கை அறை மற்றும் கழிவு அறைப் பக்கத்தில் பூஜை அறை அமையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்,

வாஸ்து முறைப் படி கடவுள் படங்களை மேற்கு அல்லது தெற்குச் சுவரில் மாட்ட வேண்டும், அப்போது தான் அவை முறையே கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கியிருக்கும், கடவுள் படங்கள் மாட்டப் பட்டிருக்கும் உயரத்திற்கு மேலே எந்தப் பொருளும் மாட்டப் கூடாது, வாஸ்து முறைப் படி பூஜை அறை அமைப்பதற்கு மிகச் சிறந்த திசை வடகிழக்கு மூலையாகும் மற்றும் வடக்கு, கிழக்குத் திசைகளிலும் அமைக்கலாம்.




ஆஞ்சநேயர் படத்தை தெற்கு திசை நோக்கி வைக்க வேண்டும். விளக்குகளை தெற்கு அல்லது வடக்கு நோக்கி வைக்கக் கூடாது, ஈசானியத்தில் பூஜை அறை அமைக்கும் பட்சத்தில் அதில் இறந்த முன்னோர்களின் படங்களை மாட்டக் கூடாது என்று ஒரு நியதி வாஸ்து சாஸ்திரத்‌தில் இருக்கிறது.


பூஜை அறையில் கடவுள்களின் உருவத்திற்கு மலர்கள் போடும்போது அந்தக் கடவுள்களின் முகமும், பாதமும் மலர்களால் மறைந்து விடாதபடிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

Get this gadget at facebook popup like box
09