கதிரவனுடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்

Powered By Kathiravancom

புண்ணியம் தேடிக்கங்க!

மனிதர்களின் மனதில் அன்பு, பாசம் என் றெல்லாம் உண்டு. இதற்காக மனிதர்கள் தன் சொந்த சுகங்களைக் கூட விட்டு விடத் தயாராக இருக்கின்றனர்; இது தான் உலக விசித்திரம்.
ஒரு தகப்பன் தன் பிள்ளைக்காக, தன் விருப்பங்களையும், சுகத்தையும் கூட விட்டு விடுகிறார். தான் எப்படி இருந்தாலும், தன் பிள்ளை சுகமாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறார்.

(பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு, பிள்ளைகள் ஆனந்தமாக இருப்பதுண்டு. இது வேறு விஷயம்.) பிள்ளைக் காக, தகப்பன் தன் சொந்த காரியங்களைக் கூட விட்டு விட தயாராக இருக்கிறார்.

ஜரிகை போட்ட புது வேஷ்டி வாங்கி வந்து, தகப்பனுக்குக் கொடுத்து கட்டிக் கொள்ள சொல்கிறான் பையன். "எனக்கு எதுக்குடா இந்த ஜரிகை வேஷ்டியெல்லாம்? நீ கட்டிக் கொள். எனக்கு ஏதாவது பழைய வேஷ்டி இருந்தாலே போதுமே…’ என்கிறார் தந்தை.
அப்பாவுக்காக, புதிதாக ஒரு ஜோடி செருப்பு வாங்கி வந்து, போட்டுக் கொள்ள சொல் கிறான் பையன். "எனக்கு எதுக்குடா இவ்வளவு விலையில் புது செருப்பு? நீ வாங்கிக் கொள். எனக்கு உள்ளே பழைய செருப்பு இருக்கே… அது போதும். அதற்கு வார் அறுந்திருக்கிறது. அதனாலென்ன? அதை தைத்துப் போட்டுக் கொண்டால் போதும். புது செருப்புப் போட்டுகிட்டு நான் எங்கே போகப் போறேன்?’ என்கிறார்.
ஒரு பாக்கெட் திருநெல்வேலி அல்வா வாங்கி வந்து அப்பாவிடம் கொடுக்கிறான் பையன். "எனக்கு இதெல்லாம் எதற்குடா? அந்தக் காலத்தில் நான் நிறைய அல்வா சாப்பிட்டிருக்கேன்; நீ, எடுத்துக்கோ… பசங்களுக்குக் கொடு…’ என்கிறார். "அல்வாவா… கொண்டா கொண்டா…’ என்று கேட்பதில்லை. பென்ஷன் பணத்தை வாங்கி, முழுசாக பையனிடம் கொடுத்து விடுகிறார்.
தனக்கு மூக்குப் பொடிக்கு காசு வேண்டுமானால் கூட, பையனிடம் கேட்க வேண்டிய நிலைமை; இதற்காக வருத்தப் படுவதில்லை அவர். பையன் கொடுத்தால் உண்டு; இல்லையேல், பக்கத்து வீட்டு கிழவரிடம், இரவல் மூக்குப் பொடி ஒரு சிட்டிகை வாங்கிப் போட்டுக் கொள்கிறார்.
ஒருவர் வருகிறார்…
"சார்… கோவில் கும்பாபிஷேகம். உங்களால் முடிந்ததை கொடுங்கள், ரொம்ப புண்ணியம்’ என்கிறார். இவர், "சார்… எல்லாம் என் பையன் பொறுப்பு. அவன் இருக்கும்போது நான் எதுவும் கொடுக்கக் கூடாது; அவன் வந்ததும் கேட்டுப் பாருங்கள்; கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள்…’ என்கிறார்.
பையனுக்காக, கோவிலுக்கு கொடுக்கக்கூட இவருக்கு சுதந்திரமில்லை. காரணம், பையன் மேலுள்ள பாசம். இந்த அன்பையும், பாசத்தையும் இறைவன் மீது வைத்து, தான் சம்பாதித்த பணத்தை தன் நன்மைக்காக, தனக்கு புண்ணியம் தேடிக் கொள்ள பயன்படுத்தக் கூடாதா? செய்ய மாட்டார் அல்லது மனம் வருவதில்லை.
பகவானுக்காக செலவழித்தால் புண்ணியம் உண்டு; பையனுக்கு சேர்த்து வைத்தால், என்ன புண்ணியம் கிடைக்கும்? பையன் ஜாலியாக செலவு செய்வான்; அதைப் பார்த்து இவர் சந்தோஷப்படுவாரா, துக்கப்படுவாரா? எல்லாம் அவன் செயல்!

Get this gadget at facebook popup like box
09