
சந்திரன்உள்ள ராசியை ஜன்ம ராசி என்பர். ஜாகத்தில் சந்திரன் உள்ள ராசியைக் கொண்டே கோசாரப் பலன்கள் கூறப்படுகின்றன. சந்திரனுக்கு பின்னுள்ள ராசி, சந்திரன் உள்ள ராசி மற்றும் அதற்கடுத்துள்ள ராசி என மூன்று ராசிகளிலும் கோசாரப்படி சனி சஞ்சரிக்கும் காலமே ஏழரைச்சனியின் காலம் என்பர்.
சந்திரன் நின்ற ராசிக்கு நான்காவது ராசியில் சனி உலவிடும் காலம் அர்த்தாஷ்டம் சனி அல்லது கண்டச் சனி என்பர். சந்திரன் இருக்கும் ராசிக்கு எட்டாவது ராசியில் சனி சஞ்சரிக்கும் காலம் அஷ்டமத்துச் சனி என்பார்கள். சனி அசுப கிரகங்களில் ஒன்று.
ஆணும் பெண்ணுமற்ற அலிக்கிரகம். எனினும் சேரும் கிரகத்தைப் பொருத்து ஆண்கிரகமாகவும் மாறும். வாயு தத்துவக் கிரகம். மனித உடலில் சிறு நீர்ப்பை, எலும்புகள், பற்கள், மண்ணீரல், காது ஆகியவற்றையும் குறிப்பிடும் காரத்துவமுள்ளவர்.
சிறுநீரகக் கோளாறு, பாதநோய், காக்கை வலிப்பு, குஷ்டம் ஆகியவையும் வலிமை குன்றிய அல்லது துஸ்தான ஆதியத்தியம் பெற்ற சனியினால் ஏற்படும்.
அவரவர் ஜாதக அமைப்பின்படி இன்ப துன்பங்களை வழங்க ஏற்பட்ட கிரகம் சனி என்பர். ஆயுள், உடல் நலம் காப்பதோடு, ஏற்றமும், இறக்கமும் செய்ய வல்லவர். நவக்கிரகங்களில் உறுதியான கிரகம் சனி ஒருவரே.
0 Kommentare:
Kommentar veröffentlichen