இந்து எனும் சொற்பதம் முதலில் பாரசீகரால் இந்து நதியின் தென்பகுதியில் வாழ்ந்து வந்த சகல மக்களையும் குறிப்பிடுவதற்கு உபயோகிக்கப்பட்டது. இது ஒரு சமஸ்கிருதச் சொல் அல்ல. பல வருடங்களுக்கு முன்பு இந்து நதி (சமஸ்கிருதப் பெயர் சிந்து) இந்தியாவிலிருந்து (முன்பு பாரதம் என்று அறியப்பட்டது)
பாரசீகத்திற்கும் ஆப்கானிஸ்தானிற்கும் இடையே ஓர் இயற்கை எல்லையாக அமைந்தது. பாரசீகர்கள் இந்து நதியின் தெற்கே வாழ்ந்து வந்த மக்களை விளக்க இந்து என்னும் பதத்தை கண்டுபிடித்தனர். அவர்கள் அந்த நதியை சிந்த் என்றும் தேசத்தை ஹிந்த் என்றும் அழைத்தனர்.
இயல்பாகவே இந்து என்ற பெயர் அவர்களுடைய மதத்தையும் குறிப்பதற்குப் படிப்படியாக அப்பகுதி மக்கள் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தனர். இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களை மிகவும் நுணுக்கமாக வேதங்களை , அவர்களுடைய சாஸ்திரங்களைப் பின்பற்றுபவர்கள் என்றும் வேதத்தின் நோக்கில் அவர்களை சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்கள் என்றும் விபரிக்கலாம். ஒருவருடைய குழந்தைகள், கணவன், மனைவி, தேசம் போன்றவற்றிற்கு சேவை செய்யும் தர்மம், சனாதன தர்மம் அல்ல. ஏனெனில் சனாதன என்பதன் அர்த்தம் அழியாதது நிரந்தரமானது.
ஆனால் இந்த தர்மங்கள் தற்காலிகமானவை. நாங்கள் எங்கள் குடும்பத்தையோ தேசத்தையோ என்றென்றும் சேவிக்க முடியாது. ஆனால் ஒவ்வொரு உயிர்வாழியின் (ஆன்மா) நிரந்தரமான இயற்கை நிலை இறைவனுக்கு அன்புடன் சேவை செய்வதாகும். ஒரு மனிதன் அவனுடைய நிரந்தர இயற்கை நிலைப்பாட்டின்படி செயற்பட்டால் அவன் அமைதியையும் இன்பத்தையும் உணர்வான். அதை அவன் அலட்சியம் செய்யின் அவன் நிறைவற்றவனாகவும் அமைதியற்றவனாகவும் காணப்படுவான்.
கீழே உள்ள முகப்புத்தக இணைப்பை லைக் செய்து எங்களையும் உங்கள் உறவாக உங்கள் முகப்புத்தகத்தில் இணைத்தக் கொள்ளுங்கள்.இந்த இணையத்தை மற்றவா்களுக்கும் பகிா்ந்து எமக்கு உற்சாகத்தைத் தாருங்கள்.சமூகத்திற்கு ஒவ்வாத தகவல்களை நாம் தந்தால் அதனை நிச்சயமாக எமக்குச் சுட்டிக் காட்டி எம்மை வழிநடத்துங்கள்.
பக்தி கானங்கள்
பிரபலமானவை
ஆன்மீகம்
Banner 180x90

Kathiravan.com » தொழிநுட்பச் செய்திகள்

வகைகள்
ஆலயங்கள்
ஆன்மீகக் கதிர்
சுவிஸ் பேர்ண் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தின் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜை! 2015
சுவிற்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் தேர்த்திருவிழா 2014
Kathiravan.com

கைகொடுப்போம்
கதிரவனின் வளர்ச்சியில் பற்றுள்ள உள்ளங்கள் தங்களின் பங்களிப்பை இங்கே செய்யலாம். நன்றி
0 Kommentare:
Kommentar veröffentlichen