கதிரவனுடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்

Powered By Kathiravancom

அமர்நாத் குகையை அடைவதற்கு முன்பு சிவபெருமான் செய்த அதிர்ச்சியளிக்கும் 7 விஷயங்கள்!!!


சிவபெருமானுக்கு இருக்கும் பல கோவில்களில், அமர்நாத் குகை தான் உலகப் புகழ் வாய்ந்ததாக விளங்குகிறது. இந்த குகையில் ஐஸ் கட்டியால் உருவான பனிலிங்கம் மக்களின் நம்பிக்கையை குறிக்கும் சின்னமாக கருதப்படுகிறது. இந்த பயணம் ஆரம்பமாகும் இடத்தில் இருந்து குகைக்கு சென்றடையும் வரை, வழியில் எண்ணிலடங்கா நிறுத்தங்கள் உள்ளன. 


இவையனைத்துமே மிகவும் அழகிய இடங்களாகும். இவைகள் சிவபெருமானின் மீதான நம்பிக்கையை இன்னமும் அதிகரிக்க செய்யும். 

அழிவே இல்லாத ரகசியத்தைப் பற்றி சிவபெருமானின் மனைவியான பார்வதி தேவியிடம் கூறப்பட்டது தொடர்பான பழபெரும் முக்கியத்துவத்தை அமர்நாத் குகை கொண்டுள்ளது. அழிவே இல்லாத ரகசியத்தை பற்றி கூற சிவபெருமானை பார்வதி தேவியை வலியுறுத்திய போது, இந்த குகையை நோக்கி பயணிக்க அவர் முடிவெடுத்தார். குகைக்கு போகும் வழியில் அவர் செய்த சில விஷயங்கள், பக்தர்களுக்கு மிகப்பெரிய விஷயங்களாக திகழ்கிறது. இந்த சில விஷயங்களால், குகைக்கு செல்லும் முழுமையான பாதையும் பேரின்பத்தை அளிக்கிறது. 


அமர் கதா பற்றிய ரகசியத்தைக் கூற தன் மகன், வாகனம் ஆகியவற்றை தனிமைப்படுத்தப்பட்ட பல இடங்களில் விட்டார். அதனால் தான் இந்த இடங்கள் அனைத்தும் புனித ஸ்தலங்களாக மாறியுள்ளது. அமர்நாத் பயணத்திற்கு இரண்டு வழிகள் உள்ளது - பஹல்கம் மற்றும் சோன்மார்க் பல்டல். புராணத்தின் படி, இந்த குகையை அடைய பஹல்கம் பாதையை தான் சிவபெருமான் பயன்படுத்தினார். இந்த பாதையில் உள்ள முக்கிய இடங்களை பற்றியும், அதனை பற்றிய சுவாரஸ்யமான சில தகவல்களை பற்றியும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்...

அமரத்துவத்தைப் பற்றி கூற பார்வதி தேவியை சிவபெருமான் குகைக்கு அழைத்து செல்லும் போது, தன் வாகனமான நந்தியை புறப்பட்ட இடத்திலேயே விட்டு விட்டார். இந்த இடம் தான் பின்னாளில் பஹல்கம் என அழைக்கப்பட்டது. இந்த இடம் மலைகளால் சூழப்பட்டிருக்கிறது.

பஹல்கமிற்கு அடுத்து வரும் இடம் தான் சந்தன்பாடி. நம்பிக்கைகளின் படி, இந்த இடத்தில் தனித்துவமான விஷயம் ஒன்றினை சிவபெருமான் செய்துள்ளார். சந்திரமௌலி என அழைக்கப்படும் சிவபெருமான் தலையில் இருக்கும் நிலவை, இங்கே தான் அவர் துறந்துள்ளார். சிவபெருமான் வரும் வரை அந்த நிலவு இங்கேயே காத்திருந்திருக்கிறது. அதனால் தான் இந்த இடத்திற்கு சந்தன்பாடி என பெயர் வந்தது.

சந்தன்படிக்கு சற்று மேலே தான் பிஸு டாப் அமைந்துள்ளது. அமர்நாத் தரிசனத்துடன் தொடர்பை கொண்டுள்ளதால் இந்த இடம் முக்கியத்துவத்தை பெறுகிறது. அமர்நாத் தரிசனத்திற்காக கடவுள்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே பெரிய சண்டையே நடந்துள்ளது. அந்த நேரம் சிவபெருமானுடைய உதவியோடு, அசுரர்களை அழித்தார்கள் கடவுள்கள். அசுரர்களின் சடலங்களை கொண்டு ஒரு மலையை உருவாக்கினார்கள். அதிலிருந்து இந்த இடத்திற்கு பிஸு டாப் என பெயர் வந்தது.

பிஸு டாப்பிற்கு அடுத்து வரும் இடம் சேஷ்நாக். தன் கழுத்தில் இருந்த பாம்பை இந்த இடத்தில் தான் சிவபெருமான் விட்டுச் சென்றுள்ளார். இங்கு நீல நிறத்திலான ஏரி ஒன்று உள்ளது. இந்த இடம் தான் சேஷ்நாக் என்பதற்கு இதுவே அத்தாட்சியாக விளங்குகிறது.

தன் மகனான விநாயகரை இங்கே தான் சிவபெருமான் விட்டு சென்றார் என நம்பப்படுகிறது. இந்த இடத்தில் பல நீர்வீழ்ச்சிகளும் அழகிய இயற்கை காட்சிகளும் நிறைந்துள்ளது. குளிர் காலத்தில் இங்கே கடுமையான குளிர் நிலவும்.

தன்னுடைய ஐந்து பஞ்ச பூதமான ஆகாயம், காற்று, நீர், நெருப்பு மற்றும் பூமியை இங்கே தான் சிவபெருமான் விட்டுச் சென்றார் என நம்பப்படுகிறது. இந்த இடத்தில் தான் ஐந்து நதிகள் சங்கமமாகிறது. சிவபெருமானின் கூந்தல் சடையில் இருந்து தான் ஐந்து நதிகளும் இங்கே பாய்கிறது என நம்பப்படுகிறது.

இந்த பயணத்தின் கடைசி இடம் தான் இது. 13500 அடி உயரத்தில் அமைந்துள்ளது இந்த குகை. இந்த குகைக்கு செல்லும் பாதையில் 3 கி.மீ. வரை பனியால் சூழ்ந்திருக்கும். பனியால் சூழப்பட்டுள்ள ஆற்றை கடந்தவுடன் இந்த குகையை கடைசியாக காணலாம். 100 அடி நீளமும் 150 அடி அகலமும் கொண்டதாகும் இந்த குகை. இந்த குகையின் உள்ளே தான் பனியால் உருவான பனி லிங்கத்தை காணலாம். இந்த குகையில் தான் அமரத்துவத்தைப் பற்றிய ரகசியத்தை பார்வதி தேவியிடம் சிவபெருமான் கூறியுள்ளார்.


Get this gadget at facebook popup like box
09