கதிரவனுடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்

Powered By Kathiravancom

துன்பம் போக்கும் ஸ்ரீ பைரவர் வழிபாட்டு மந்திரங்கள்!

சனிக்கிழமைகளிலோ, பிரதோஷ தினங்களிலோ, ஞாயிற்றுக்கிழமை ராகு காலங்களிலோ அல்லது செவ்வாய்க்கிழமைகளிலோ, மிக முக்கியமாக தேய்பிறை அஷ்டமி தினத்தன்றோ ஸ்ரீபைரவரின் சன்னிதியில் வெண்பூசணியில் நல்லெண்ணெய் விட்டு பஞ்சுத் திரியால் விளக்கேற்ற வேண்டும்.




பைரவர் சன்னிதிக்குச் சென்றது முதல் வீடு திரும்பும்வரை யாரிடமும் பேசாமல், எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். வழக்கம்போல அசைவ உணவுப் பக்கமே செல்வது கூடாது. பைரவருக்குரிய மந்திரங்கள் வருமாறு:– 


ஓம் பைரவாய நமஹ’ 

‘ஓம் ப்ராம் பைரவாய நமஹ’ 

‘ஓம் நமோ ருத்ராய 
கபாலியாய பைரவாய 
த்ரைலோக் நாதாய 
ஓம் ஹ்ரீம் பட் ஸ்வாஹா’ 

இவை பைரவருக்கான பல மந்திரங்களில் மூன்று மட்டுமே மிகவும் சிறப்பு வாய்ந்தவை. பைரவருக்குரிய கால நேரங்களில், நமக்குச் சரியென்று படும் மந்திரத்தை அந்தக் குறிப்பிட்ட நாளில் இருந்து, தினமும் பைரவர் சன்னிதியில் 48 முறை ஜபம் செய்து வந்தால், துன்பங்களுக்குத் துன்பம் தரும் தூய சக்தி பெற்றவர்களாவோம். முக்கியமாக சனிக்கிழமைகளில் மந்திர ஜபம் செய்து வந்தால் கை மேல் பலன் காணலாம்.

Get this gadget at facebook popup like box
09