கதிரவனுடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்

Powered By Kathiravancom

கோவிலில் கடை பிடிக்க வேண்டிய விஷயங்கள்!

1. பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்க கூடாது.

2. வீண் வார்த்தைகளும், தகாத சொற்களும் பேசுதல் கூடாது.



3. சோம்பல் முறித்தல், தலை சிக்கெடுத்தல், தலை விரித்துப் போட்டு      கொண்டு செல்லுதல், வெற்றிலை பாக்கு போடுதல் கூடாது.


4. பிறப்பு, இறப்பு, தீட்டுக்களுடன் செல்ல கூடாது.


5. கைலி, தலையில் தொப்பி, முண்டாசு அணிய கூடாது.


6. கொடிமரம், பலிபீடம்,நந்தி, கோபுரம் நிழலை மிதிக்க கூடாது.


7. கவர்ச்சியான ஆடைகள் அணியக்கூடாது.


8. நந்தி தேவருக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் போகக் கூடாது.


9. தரிசனம் செய்தபின் பின்னால் சிறிது தூரம் நடந்து, பின்னர் திரும்ப வேண்டும்.


10. ஒரு கையால் தரிசனம் செய்ய கூடாது.


11. மேலே துண்டுடன் தரிசனம் செய்ய கூடாது.


12. கோவிலுக்குள் உண்ண, உறங்க கூடாது.


13. கோவிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமர கூடாது.


14. பலிபீடத்திற்கு உள்ளே சந்நிதியில் யாரையும் வணங்க கூடாது.


15. கோவில் சொத்துக்களை எவ்விதத்திலும் அபகரிக்கவோ அனுபவிக்கவோ கூடாது.


16. அஷ்டமி,நவமி, அமாவசை,பௌர்ணமி,மாத பிறப்பு, சோமவரம், பிரதோஷம், சதுர்த்தி, இந்த தினங்களில் வில்வம் பறிக்கக் கூடாது.


17. ஆலயத்தில் புகைப்படம் எடுக்க கூடாது.


18. தெய்வ வழிபாடு ஈர துணி கூடாது.


19. கோவிலுக்குள் குளிக்காமல் செல்ல கூடாது.


20. சந்நிதியில் தீபம் இல்லாமல் தரிசனம் செய்யக் கூடாது.


21. கோவிலுக்கு சென்று வந்தபின் உடனடியாக கால்களை கழுவக் கூடாது. சிறிது நேரம் அமர்ந்த பிறகு தான் கழுவிக்கொள்ள வேண்டும்


22. கோவிலுக்குள் நுழைந்தது முதல் வெளியே வரும் வரை நிதானமாக அவசரம் இன்றி கடவுளை நமக்குள் உணர்ந்து ஓம் நமசிவாய மந்திரம் கூறி வழிபடுவது மிக சிறந்ததாகும்.


23. கோவிலில் நுழையும் போதும் திரும்பி வரும் போதும் கோபுர தரிசனம் அவசியம்.


24. ஸ்தல விருட்சங்களை இரவில் வழிபட கூடாது.


25. கோவில் உள்ளே உரக்க பேசுதல் கூடாது.


26. நம்முடைய பேச்சுக்களோ செயல்களோ அடுத்தவர்களுடைய

வழிபாடையோ, தியானத்தையோ இடையுறு செய்ய கூடாது.

Get this gadget at facebook popup like box
09