கதிரவனுடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்

Powered By Kathiravancom

லட்சுமி கடாட்சம் கிடைக்கச் செய்யும் மகாலட்சுமி மந்திரம்

'ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்'


- என்ற இந்த மந்திரத்தை மகாலட்சுமியின் திருவுருவத்தின் முன்பு தீபமேற்றி வைத்து, நைவேத்தியம் சமர்ப்பித்து 108 முறைகள் ஜபம் செய்ய வேண்டும். வில்வ தளங்கள் கொண்டு




மகாலட்சுமியின் திருவுருவை அலங்கரிப்பதும், கஸ்தூரி, அத்தர், ஜவ்வாது, சந்தனம் முதலான வாசனை திரவியங்களால் மகாலட்சுமியின் திருவுருவுக்குப் பொட்டிடுவதும்,



நல்ல சந்தன மணமிக்க ஊதுபத்திகளை பொருத்தி வைப்பதும் மிக நல்ல தேவதா அலையீர்ப்பு மண்டலத்தை அமைத்து வைக்கும். அன்றுமுதல் தினமும் காலையிலும், அந்தி மாலையிலும் 108 முறை ஜபம் செய்வது அவசியம். ஜபத்தை 90 நாட்கள் விடாமல் செய்வதும் முக்கியம்.


பூஜை நாட்களில் அசைவம் தவிர்ப்பதும், மனம், வாக்கு, காயம் ஆகியவற்றில் திரி கரண சுத்தியும் மிகவும் முக்கியமாகும். அவை யின்றி இம்மந்திரம் சித்தியாகாது.


அதாவது மனதில் சுத்த சத்வ எண்ணங்களும், பேச்சில் இனிமையும், உண்மையும் வெளிப்படும்படியாகவும், எப்போதும் சுத்தமாகவும், வாசனைகளுடனும் கூடிய ஆடைகளை அணிந்தும், சொல் வாக்கு தவறாமலும் இருப்பவருக்கே லட்சுமி கடாட்சம் உண்டாகும், செல்வ வளம் கூடும்.

Get this gadget at facebook popup like box
09